கோலப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா,தமிழ்நாடு வ உ சி பேரவை மாநில தலைவர் கீதா செல்வ மாரியப்பன் தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஐயப்பன் ஆகியோர் பங்கேற்பு
கோலப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா தூத்துக்குடி மாநகராட்சி 38 வது வார்டு நண்பர்கள் குழு சார்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு பத்தாம் ஆண்டு மெகா கோலப்போட்டி நடந்தது.
கோல போட்டியில் முதலிடம் பெற்ற லட்சுமிக்கு தங்க நாணயம் இரண்டு மற்றும் மூன்றாம் பரிசு பெற்ற சுகிர்தாபதி சஞ்சித் ஆகியோருக்கு வெள்ளிப் பரிசு வழங்கப்பட்டது. இது தவிர ஆறுதல் பரிசாக எவர்சில்வர் பொருட்கள் வழங்கப்பட்டது. நேற்று குமாரர் தெருவில் நடந்த பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு வ உ சி பேரவை மாநில தலைவர் சைவத்திரு கீதா செல்வ மாரியப்பன், தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஐயப்பன் ஆகியோர் பரிசு வழங்கினார். ஷேக் மைதீன் வரவேற்றார். இந்து மக்கள் கட்சி ராமகுணசீலன், ஓம் சக்தி சங்கர் ஆகியோர் முன்னில வகித்தனர். முருகன். சுப்பையா. பாண்டியன். பாஸ்கர். குசேன் அலி. பாலகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.