தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி
தூத்துக்குடி 2021 ஜனவரி 21 ;தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி மற்றும் ஆணையர்(ம) தனிஅலுவலர் வீ.ப.ஜெயசீலன்,வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது.... இதுகுறித்து அவரது அறிவிப்பு ;தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் முதன்மை அரசு செயலர் பொது (தேர்தல்கள்-ஏஐஐ) துறை, தலைமை செயலகம், சென்னை அவர்கள் அறிவுறுத்தியபடி தூத்துக்குடி மாவட்டத்தில் 11வது தேசிய வாக்காளர் தினம் 25.01.2021 அன்று கொண்டாடப்படுவதை ஒட்டி, தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி மாநகராட்சிப்பகுதியில்; 25.01.2021 அன்று காலை 7.00 மணியளவில் மிதிவண்டி ஓட்டும் நிகழ்ச்சியானது பாளைரோடு மேற்கு எம்.ஜி.ஆர்.பூங்கா முன்பு இருந்து துவங்கி தெற்கு கடற்கரை சாலை ரோச்பூங்கா வரை சென்றடைகிறது. மேலும் அதனை தொடர்ந்து ரோச் பூங்காவில் தேர்தல் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் ரங்கோலி கோலமிடும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
மேற்கண்ட தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மிதிவண்டி பேரணியில்; மாவட்டஆட்சியர், காவல்கண்காணிப்பாளர், மாநகராட்சிஆணையர், கூடுதல் மாவட்ட ஆட்சியர், சார்ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளார்கள். எனவே பொது மக்கள், சமுக ஆர்வலர்கள் மற்றும் 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்கள் மற்றும் வாக்காளர்கள் தங்களது சொந்த மிதிவண்டிகளுடன்; எம்.ஜி.ஆர்.பூங்கா முன்பு காலை 6.30 மணியளவில் வருகைதந்து சிறப்பிக்குமாறு வாக்காளர் பதிவு அலுவலர்,214.தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி மற்றும் ஆணையர்(ம) தனிஅலுவலர் முனைவர்.வீ.ப.ஜெயசீலன், தெரிவித்தார்கள்.