Onetamil News Logo

மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரினங்களை பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வு கண்காட்சி 

Onetamil News
 

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரினங்களை பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வு கண்காட்சி     


 தூத்துக்குடி 2020 பிப்ரவரி 25 ;தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரினங்களை பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வு கண்காட்சியை செவ்வாய் கிழமை மன்னார் வளைகுடா கடல் உயிர்கோள காப்பக அறக்கட்டளை இயக்குநர் மற்றும் வனஉயிரினக்காப்பாளர் மாரிமுத்து, தொடக்கி வைத்தார். அப்போது தூத்துக்குடி மாவட்ட உதவி வனப்பாதுகாவலர் பாலசுப்பிரமணியன், கல்லூரி முதல்வர் நாகராஜ், மற்றும் வனத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
மன்னார் வளைகுடா கடல் பகுதியானது இராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரை 21 தீவுகளை உள்ளடக்கிய 10500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பகுதியாகும் இந்த கடல்பகுதியில ; 4200க்கும் அதிகமான அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் உள்ளது. இந்த கண்காட்சியில் 1000க்கும் மேற்பட்ட அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் உயிருள்ள மற்றும் பதப்படுத்திய நிலையில் காட்சிக்கு வைக்கப்படடுள்ளது.
பிப்ரவரி 25ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை நடைபெறும் கண்காட்சியில் அரிய வகை கடல்வாழ் உயிரினங்களான திமிங்கல வகைகள், ஓங்கி வகைகள்  கடல் பசு,கடல்  ஆமைகள், சுறா, கங்கை சுறா, பனை மீன், பால் சுறா, கடல்  குதிரை, திருக்கை, வேளா மீன், உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. மேலும் கடல் வாழ் உயிரினங்களின் உணவுக்கான கடல் தாவரங்கள், அதன் வாழ்விடம் மற்றும்  இனப்பெருக்கத்துக்கான
அனைத்து வகை பவளப்பாறைகள், கடல் விசிறிகள், கடல் அட்டைகள், கடல் பஞ்சுகள், உள்ளிட்டவையும ; இடம் பெற்றுள்ளன. இது தவிர தவளை சங்கு, வாழைப்பூ சங்கு, மாட்டுத்தலை சங்கு, அன்னாச்சி பழ சங்கு, சிலந்தி சங்கு, போன்ற அரிய வகை சங்குகள், சோவி வகைகள், உள்ளிட்டவையும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. 

இந்த கண்காட்சிக்கு 6000க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட  கல்வித்துறை மூலமாக அழைப்பு விடுக்கப்பட்டள்ளது. மேலும் அனைத்து பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், மற்றும் இயற்கை ஆர்வலர்கள் பிப்ரவரி 27ஆம் தேதிவரை கண்டுகளிக்கலாம்.
விழிப்புணர்வு கண்காட்சியில் கடல்வாழ் உயிரினங்களின் உணவுசங்கிலி முறை மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்தும், சுற்றுச் சூழல் மாசுபடுதல், புவி வெப்பமயமாதல் போன்ற காரணங்களால் மன்னார் வளைகுடா பகுதியும் பாதிக்கப்படுகிறது. 
என்பது குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த கண்காட்சியை ரா. ரகுவரன், வனச் சரக அலுவலர் தலைமையில் வனவர்கள்,  மதனகுமார், முத்துராம் ,அருண்குமார், பயிற்சி வனச் சரக அலுவலர்கள்  வனக்காப்பாளர்கள் வேட்டைத்தடுப்பு காவலர்கள் மற்றும் திட்டக்களப்பணியாளர்கள் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo