பப்ஜி கேம் -தூத்துக்குடியில் இளைஞர்கள் படு ஆட்டம் ஆடும் நிலைமை ;தடை செய்யப்படுமா? பள்ளிகள் திறப்பதே இளைஞர்கள் வளர்ச்சிக்கு நல்லது ; பெற்றோர்கள் கோரிக்கை
தூத்துக்குடி 2020 டிசம்பர் 2 ;சிறுவர்களை சீரழிக்கும் ஆன்லைன் ‘பப்ஜி கேம்’: தூத்துக்குடியில் இளைஞர்கள் படு ஆட்டம் ஆடும் நிலைமை தலைகீழாக சென்றுகொண்டிருக்கிறது.
சிறுவர், இளைஞர்களை சீரழிக்கும் ஆன்லைன் ‘பப்ஜி கேம்’-ஐ தடை செய்ய வலியுறுத்தி பெற்றோர்கள் கூறிவருகின்றனர்.
சமீபகாலமாக சிறுவர்கள் முதல் பெரியோர் வரை ஆன்லைன் ‘பப்ஜி கேமிற்கு’ அடிமையாக உள்ளனர். இந்த விளையாட்டை மொபைலிலே விளையாடலாம் என்பதால் இரவு, பகல் என பாராமல் சாப்பிடாமல், தூங்காமல் விளையாடி வந்தனர்.
இந்த விளையாட்டை விளையாட விடாமல் பெற்றோர் தடுத்ததால் சிறுவர்கள் சிலர் தற்கொலை செய்து கொண்டனர். மாணவர்கள் பலர் பள்ளி, கல்லூரிக்குச் செல்லாமல் விளையாட்டில் மூழ்கினர். இதையடுத்து இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து ‘பப்ஜி கேம்’-ஐ ஒரு நாளைக்கு 6 மணி நேரம் மட்டுமே விளையாட முடியும் என்ற வரையறையை அரசு கொண்டு வந்தது.
இருந்தபோதிலும் இந்த விளையாட்டை முழுமையாக தடை செய்ய வேண்டுமென பெற்றோர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி பெற்றோர்கள் பப்ஜி கேம்-யை தடை செய்ய வேண்டும் என்கின்றனர்.
ஆன்லைன் பாதிப்பு குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.கொரோனா பரவல் எதிரொலியால் 2020 மார்ச் 24ம் தேதி முதல் இந்தியா முழுவதும்,அணைத்து பணிகளும் தடுத்து நிற்கும் நிலைமை உருவானது.இந்த நிலையில் கடந்த 9 மாதமாக சிறுவர்கள் பள்ளி மாணவர்கள் 99 சதவிகிதம் பேர் மொபைல் போனில் விளையாண்டு கொண்டிருக்கிறார்கள் . கிராமம், நகரம் வித்தியாசமின்றி, எல்லா இடங்களிலும் இதுதான் நிலை. மொபைல் மொத்தப் பொழுதுகளையும் தின்று தீர்த்துக்கொண்டிருக்கிறது. பள்ளிகள் திறப்பதே இளைஞர்கள் வளர்ச்சிக்கு நல்லது என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.