ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை
ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை
சங்கரன்கோவில், 2021 டிச. 5 ;தென்காசி மாவட்டம் சென்னிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மனைவி பால்த்தாய். பால்த்தாய் தனது இரண்டாவது பிரசவத்திற்கு சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இரத்த அழுத்தம் அதிகரிக்கவே பணியில் இருந்த பணியாளர்கள் சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸில் அனுப்பிவைத்தனர். 108 ஆம்புலன்ஸ் குவளைக் கன்னி கிராமம் அருகே வரும் போது பிரசவ வலி ஏற்பட்டு பால்த்தாயிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனை தொடர்ந்து சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.