பகுஜன் திராவிட நண்பர்கள் பெரியார் கன்சிராம் அரசியல் நற்செய்தி பயணத்திற்கு உற்சாக வரவேற்பு
உத்திரபிரதேசம் 2021 செப் 24 ; பெரியார்-கன்சிராம் அரசியல் நற்செய்தி பயணம் ஏழாம் நாளில் கான்பூர் கிட்வாய் நகரில் உள்ள டாக்டர் சிரஞ்சிலால் தேசிய இடைக்கல்லூரி மேலாளர் பஜன்லால் பால் தலைமையில் அகில இந்திய பால்-பாகேல் மகாசபையின் தேசிய பொறுப்பாளர்கள் பி.எல். பால், பிரஜேஷ் பிரதாப் சிங் பால், ராஜேஷ் குமார், ஸ்ரீகாந்த் பால் ஆகியோர் பதிக தேசிய தலைவர் ஜீவன்குமார் மள்ளா மற்றும் தேசிய பொதுச் செயலாளர் தினேஷ் குமார் கவுதம் அவர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, எதிர்வரும் உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் -2022 குறித்து இரு தரப்பினருக்கும் இடையே முக்கிய விவாதங்கள் நடந்தன. அதன்பிறகு, பதிக வின் செயல்பாட்டு பாணியால் ஈர்க்கப்பட்ட மகாசபாவின் பொறுப்பாளர்கள் தங்கள் ஒப்புதலை தெரிவித்தனர்.
அதன்பிறகு, பெரியார் கன்சிராம் அரசியல் நற்செய்தி பயணம் கான்பூரிலிருந்து பகுஜன் திராவிட மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தவாறு லக்னோவிற்கு புறப்பட்டது...
லக்னோ விற்கு செல்லும் வழியில் சவுத்ரி சரண் சிங் அமாசி விமான நிலையம் அருகே நாகேஷ்வர் பிரசாத், ஏ. எச். செய்தி நிறுவன உரிமையாளர், சமூக செயற்பாட்டாளர் ஷ்ரவண் குமார் குஷ்வாஹா, வினோத் சாம்ராட், ஓய்வு பெற்ற பொறியாளர் கிருபா சங்கர் சவிதா அரசு ஊழியர்கள் பகுஜன் திராவிட தளபதிகளுக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.
அதன் பிறகு, அங்கிருந்து பகுஜன் திராவிட உறவுகளை சந்தித்தவாறு ஆச்சார்யா மோதிரம் சாஸ்திரி சாதனா புத்த விஹார், தக்ரோஹி; லக்னோவின் இந்திராநகர் காலனியை அடைந்தது. இங்குள்ள பகுஜன் திராவிட நண்பர்கள் பெரியார் கன்சிராம் அரசியல் நற்செய்தி பயணத்திற்கு உற்சாக வரவேற்பளித்தனர்.இதனைத் தொடர்ந்து கலந்துரையாடல் நடைபெற்றது.