தூத்துக்குடியில் இருந்து கருப்பசாமி கோவில் திருவிழாவுக்கு புளியரை சென்ற பண்டராம்பட்டி கிராம மக்களை மற்றொரு சமுதாய மக்கள் கம்பாள் தாக்கி அடிதடியில் ஈடுபட்டதால் பெரும் பதற்றம்
தூத்துக்குடியில் இருந்து கோவில் திருவிழாவுக்கு புளியரை சென்ற பண்டராம்பட்டி கிராம மக்களை மற்றொரு சமுதாய மக்கள் கம்பாள் தாக்கி அடிதடியில் ஈடுபட்டதால் பெரும் பதற்றம். ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் இருந்து கருப்பசாமி கோவில் திருவிழாக்கு சென்ற ஒரு சமுதாய மக்களும் தென்காசி மாவட்டம் புளியரை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் மற்றொரு சமுதாய மக்களும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு முற்றி அடிதடி வரை சென்று வாகனத்தையும் பக்தர்களையும் சாதியின் பெயரைச் சொல்லி கம்புகளால் அடித்து மண்டைகள் உடைக்கப்பட்டு அவர்கள் சென்ற வாகனமும் அடித்து ஒதுக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலில் தூத்துக்குடி பண்டாரம் பட்டி பகுதியைச் சேர்ந்த வைசால்,அருண், அரவிந்த் ஆகிய மூவரும் திருநெல்வேலி ஹைக்கிரவுண்ட் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் உடனடியாக தகவல் அறிந்த தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன்,உத்தரவின்பெயரில் உதவி ஆய்வாளர் தீபன் குமார் தூத்துக்குடிக்கு வந்து நேரடி விசாரணை செய்து கொண்டு வருகிறார்.