Onetamil News Logo

நிலவில் விழுந்து கிடக்கும் 'லேண்டர்' சாதனத்துடனான தொடர்பை மீட்பதற்கு மிக குறைவான வாய்ப்புகளே  இருப்பதாக விஞ்ஞானிகள் தகவல் 

Onetamil News
 

நிலவில் விழுந்து கிடக்கும் 'லேண்டர்' சாதனத்துடனான தொடர்பை மீட்பதற்கு மிக குறைவான வாய்ப்புகளே  இருப்பதாக விஞ்ஞானிகள் தகவல் 


பெங்களூரு: 2019 செப் 14 ; நிலவில் விழுந்து கிடக்கும் 'லேண்டர்' சாதனத்துடனான தொடர்பை மீட்பதற்கு மிக குறைவான வாய்ப்புகளே இருப்பதாக விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான் - 2 விண்கலத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் விண்ணில் ஏவினர். விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டதும் அதிலிருந்து லேண்டர் (விக்ரம்) வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. இதையடுத்து நிலவில் பத்திரமாக தரையிறக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் நிலவில் தரையிறங்க 2.1 கி.மீ. துாரம் இருக்கும்போது லேண்டரில் இருந்து கட்டுப்பாட்டு அறைக்கு 'சிக்னல்' கிடைக்கவில்லை. கடுமையான முயற்சிகளை மேற்கொண்டும் தொடர்பை மீட்க முடியவில்லை. நிலவை சுற்றும் சாதனமான 'ஆர்பிட்டர்', லேண்டர் நிலவில் விழுந்து கிடக்கும் புகைப்படத்தை அனுப்பி வைத்துள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.*
இஸ்ரோ வட்டாரங்கள் கூறியதாவது: ஒவ்வொரு மணி நேரம் கடக்கும் போதும் லேண்டர் சாதனத்துடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு மிகவும் குறைந்து வருகிறது. நிலவில் லேண்டர் சாதனத்தின் செயல்பாடு 14 நாட்களுக்கு மட்டுமே இருக்கும். இந்த 14 நாட்களுக்கு மட்டுமே அதற்கு சூரிய ஒளி கிடைக்கும். இதன் மூலம் லேண்டரில் உள்ள சோலார் தகடு மூலம் அதில் உள்ள பேட்டரியை உயிர் பெறச் செய்ய முடியும்.*
ஆனால் 14 நாட்களுக்கு பின் லேண்டரில் சூரிய ஒளி படாது. அதற்கு பின் லேண்டரில் உள்ள பேட்டரியை இயங்கச் செய்வது சாத்தியமல்ல. தற்போது லேண்டரில் இருந்து 'சிக்னல்' துண்டிக்கப்பட்டு ஒரு வாரம் முடிந்து விட்டது. அதன் ஆயுள் காலம் இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளது. மேலும் லேண்டர் சாதனம் நிலவில் விழுந்தபோது ஏற்பட்ட அதிர்வுகளால் அதில் சேதம் ஏற்பட்டிருக்கவும் வாய்ப்பு உள்ளது. இதனால் லேண்டருடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு மிக குறைவாகவே உள்ளது. இவ்வாறு கூறினர்*
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo