Onetamil News Logo

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Onetamil News
 

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்


தீபாவளி திருநாளை கொண்டாடும் அனைவரின் வாழ்விலும் நன்மையும், உண்மையும்,மென்மையும் உன்னத மனிதநேய தன்மையும் ஒளி சிந்திட வாழ்த்துகிறோம்.
இந்தியாவில் வாழும் அனைத்து மத, மொழி, இன, கலாச்சாரங்களை கொண்ட அனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற உணர்வில் வாழ வேண்டும்.
இந்த உணர்வில் நம்பிக்கையுள்ள நல்லவர்கள், இந்திய தேச மக்களை வேற்றுமையில் ஒற்றுமை பேணுகிற மக்களாக வாழ வழிகாட்ட வேண்டும்.
உலகளவில் இந்திய ஜனநாயகம் உயர்ந்து நிற்கின்றது இதற்கு காரணம். மாபெரும் தேசிய தலைவர்கள், எல்லா மதங்களையும் சேர்ந்தவர்கள் இதயப்பூர்வமாக ஒருமனப்பட்டு , ஓர்மை உணர்வோடு வாழ்வதற்கான அரசியல் பண்பாட்டை உருவாக்கி தந்துவிட்டு சென்றிருக்கிறார்கள்.
மத துவேஷம், மத விரோதம், மத குரோதம், மத மறுப்பு, மத வெறுப்பு, மத கிலேசம், மத மாச்சரியம் போன்ற தீமைகளிலிருந்து நாட்டை பாதுக்காக்கக்கூடிய சிறு நெறியை முந்தைய தேசிய தலைவர்கள் காட்டிச் சென்றிருக்கிறார்கள்.
அந்த நெறிமுறையை ஒவ்வொரு இந்தியனின் உள்ளத்திலும் ஊட்ட வேண்டிய பொறுப்பு இன்றைய அரசியல் தலைவர்களுக்கு இருக்கிறது.அவரவர் மதம், அவரவருக்குரியது. அவரவர் செல்லும் வழி, அவரவர் விரும்பும் வழி. இந்திய மக்கள் அனைவரும் செல்லும் பொதுவான வழி இந்திய அரசியல் சாசனம் வழங்கியிருக்கிற வழி. அந்த வழியில் எல்லோரும் செல்வோம், இந்திய திருநாட்டை பொன்கொழிக்கும் நல்லரசாக மாற்றி அமைத்திட இந்த நன்நாளில் சபதம் ஏற்போம். 
எல்லோருக்கும் இதயம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள்.💐💐💐💐💐💐💐💐💐
வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். www.onetamilnews.com 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo