பாரதியார் வித்யாலயம் மாணவ, மாணவிகள் பெருமாள்புரத்தில் உள்ள நுண் உரம் செயலாக்க மையத்தை பார்த்தனர்
தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மாணவ, மாணவிகள் பேரணியாக சென்று பெருமாள்புரத்தில் உள்ள நுண் உரம் செயலாக்க மையத்தை பார்வையிட்டனர்.
அவர்களுக்கு அங்கு மக்கும் குப்பை, மக்கா குப்பைகளை பிரித்து மக்கும் குப்பைகளை உரமாக்கும் விதம் பற்றி செயல்முறை விளக்கம் செய்துகாட்டினார்கள். சுற்றுச் சூழல் பற்றியும் குப்பைகளை பிரித்துக் கொடுப்பதன் அவசியம் பற்றியும் மரங்கள் நடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் எடுத்துக் கூறினார்கள்.
சுகாதார ஆய்வாளர் ராஜசேகர் செயல்முறை விளக்கம் அளித்தார்கள். இந்த சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவி கலைச்செல்வி கதிரேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டார்கள். மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன
பிளாஸ்டிக் பாட்டில்களால் கட்டப்பட்டுள்ள கழிவறையை மாணவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
இந்த பேரணி, விளக்கக் கூட்டத்தில் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்துகொண்டனர். நாட்டு நலத்திட்ட அலுவலர் மரகதவள்ளி நன்றி கூறினார்.