Onetamil News Logo

தூத்துக்குடி விமான நிலையத்தில் இரண்டு 625 கிலோவாட் ஜெனரேட்டர்கள் நிறுவிட பூமி பூஜை ;விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டினார்.     

Onetamil News
 

தூத்துக்குடி விமான நிலையத்தில் இரண்டு 625 கிலோவாட் ஜெனரேட்டர்கள் நிறுவிட பூமி பூஜை ;விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டினார்.    


தூத்துக்குடி 2020 செப் 17 ; தூத்துக்குடி விமான நிலையத்தில் இரண்டு 625 கிலோவாட் ஜெனரேட்டர்கள் நிறுவிட பூமி பூஜை நடைபெற்றது.
தூத்துக்குடி விமான நிலையத்தில் கடந்த 1992 முதல்  இரண்டு 70 கிலோவாட் மின்சார ஜெனரேட்டர்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது. தற்போது இரண்டு 625 கிலோவாட் ஜெனரேட்டர்கள் நிறுவப்பட உள்ளன. இதற்கான பூமி பூஜை நடைபெற்றது. ஆறு மாத காலத்திற்குள் இவைகள் நிறுவப்படவுள்ளன. விமான நிலையத்தில் மின்சாரம் தடை ஏற்படும் காலங்களில் இதன் ஒரு ஜெனரேட்டர் விமான நிலைய ஓடுதளம் மற்றும் நிலைய முனையம் ஆகியவற்றிற்கு தேவைப்படும் மொத்த மின்சார தேவைகளை பூர்த்தி செய்யும். மேலும் ஒரு ஜெனரேட்டர் அவசர தேவையின் படி பயன்படுத்தப்படும். இந்தப் பூமி பூஜையில் விமான நிலைய இயக்குனர்  N. சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் விமான நிலைய வளர்ச்சி திட்ட இயக்குனர் மற்றும் சிவில் இணை பொது மேலாளர்  R. ராதாகிருஷ்ணன், உதவி பொது மேலாளர்  K. G. பிஜு மற்றும் முனைய மேலாளர் ஜெயராமன் மேலும் விமான நிலைய ஊழியர்களும் கலந்து கொண்டனர். வருகின்ற 2021 மார்ச் மாதத்தில் இந்த ஜெனரேட்டர்கள்  பயன்பாட்டிற்கு வரவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் விமான பயணிகளுக்கு பகல் நேரத்திலும் இரவு விமானங்கள் இயக்கப்படும் பொழுதும் விமான நிலையத்தில் தடையில்லாத மின்சாரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo