டி.சவேரியார்புரத்தில் புதிய ரேசன்கடைக்கு பூமி பூஜை சண்முகையா எம்.எல்.ஏ, பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தூத்துக்குடி ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட டி.சவேரியார்புரத்தில் இயங்கி வந்த ரேஷன்கடை கட்டடம் பழுதாகி இருந்ததால் புதிதாக கட்டிடம் கட்டி தர வேண்டும் என்று மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார், எம்.எல்.ஏ சண்முகையாவிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனையடுத்து ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 14லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை டி.சவேரியார்புரத்தில் நடைபெற்றது. சண்முககையா எம்.எல்.ஏ, பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் ஆகியோர் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் பாதிரியார் குழந்தைராஜன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளரும் ஊராட்;சி மன்ற உறுப்பினருமான ஸ்டாலின், தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி துணை அமைப்பாளர் ஆரோக்கியமேரி, வர்த்தக அணி துணை அமைப்பாளர் கணேசன், மாவட்ட பிரதிநிதி சப்பாணிமுத்து, திமுக ஓன்றிய துணைச்செயலாளர் ராமசந்திரன், ஒன்றிய கவுன்சிலர் ஆனந்தி, ஊரக வளர்ச்சி துறை பொறியாளர் தளவாய், பணிமேற்பார்வையாளர் முத்துராமன், ஊர்த்தலைவர் பிரான்சிஸ், நிர்வாகி ராயப்பன், சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் வில்சன், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், மற்றும் கௌதம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.