Onetamil News Logo

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் சைக்கிள் பேரணி : ஆணையாளர் ஜெயசீலன் பங்கேற்பு   

Onetamil News
 

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் சைக்கிள் பேரணி : ஆணையாளர் ஜெயசீலன் பங்கேற்பு     


 தூத்துக்குடி 2020 அக்டோபர் 17 ;மத்திய அரசு நகர்ப்புற வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் சார்பில் மாற்றத்திற்கான சவால் என்ற புதிய திட்டத்தின் படி தூத்துக்குடி மாநகராட்சி சீர்மிகு திட்டத்தின் கீழ் பொதுமக்கள் சைக்கிள் ஓட்டுவதை ஊக்குவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பல்வேறு வாகனங்களில் இருந்து  வெளியேறும் புகையினால் சுற்றுப்புறச்சூழல் வெகுவாக பதிக்கப்ட்டுள்ளது.இதனால் சுகாதரமற்ற காற்றின் காரணமாக பல்வேறு இன்னலுக்கு உள்ளாகிவருகின்றனர்.எனவே சுற்றச்சூழலை பாதுகாக்கவும்,பொதுமக்கள் ஆரோக்கியமாக வாழவும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும்,இன்று சைக்கிள் பேரணி மாநகராட்சி சார்பில் நடந்தது.இந்த சைக்கிள் பேரணி மைய அலுவலகத்தில் தொடங்கி நகரில் முக்கிய சாலைகள் வழியாக சென்று மீண்டும் வந்தடைந்தது.இதில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஜெயசீலன்,சார் ஆட்சியர் ,மாநகர நல அலுவலர் டாக்டர் அருண்குமார் ,மாநகராட்சி அதிகாரிகள்,அலுவலர்கள் பணியாளர்கள் பலர் பங்கேற்றார்கள்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo