Onetamil News Logo

முத்தையாபுரம் பகுதியில் பைக் திருடியவர் கைது - எஸ்.ஐ.முத்துமாலை அதிரடியாக பைக் திருடியவரை ஒரே நாளில் கைது செய்து பைக் மீட்பு   

Onetamil News
 

முத்தையாபுரம் பகுதியில் பைக் திருடியவர் கைது - எஸ்.ஐ.முத்துமாலை அதிரடியாக பைக் திருடியவரை ஒரே நாளில் கைது செய்து பைக் மீட்பு   


தூத்துக்குடி 2021 அக்டோபர் 13 ;முத்தையாபுரம் பகுதியில் பைக் திருடியவர் கைது - எஸ்.ஐ.முத்துமாலை அதிரடியாக பைக் திருடியவரை ஒரே நாளில் கைது செய்து பைக் மீட்க்கப்பட்டது.                                                                            
                 தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் காவல் நிலையம்,முத்தையாபுரம் பகுதியில் பைக் திருடியவர் கைது - எஸ்.ஐ.முத்துமாலை அதிரடியாக பைக் திருடியவரை ஒரே நாளில் கைது செய்து பைக் மீட்கப்பட்டது.           
                 திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம்  பகுதியைச் சேர்ந்த மாயாண்டி மகன் செல்வகுமார் (25) என்பவர் 11.10.2021 அன்று தனது இரு சக்கர வாகனத்தை முத்தையாபுரத்தில் உள்ள ஒரு காம்ப்ளக்ஸ் பகுதியில் நிறுத்தி வைத்துள்ளார். பின்னர் திரும்ப வந்து பார்க்கும் பொழுது அந்த இரு சக்கர வாகனம் திருடுபோனது தெரியவந்தது.
இதுகுறித்து செல்வகுமார் அளித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில் எப்போதும்வென்றான் காட்டுநாயக்கன்பட்டியை சேர்ந்த பெருமாள் மகன் முருகன் (27) என்பவர் திருடியது தெரியவந்தது.
இதுகுறித்து முத்தையாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்து மாலை வழக்கு பதிவு செய்து மேற்படி  முருகனை கைது செய்து, திருடப்பட்ட ரூபாய் 52,000/- மதிப்பிலான இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்தார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo