Onetamil News Logo

ஏ டி எம் மெஷினுக்கு இன்று பிறந்த நாள் ; 1967ம் ஆண்டு இதே ஜூன் 27ம் தேதி 

Onetamil News
 

ஏ டி எம் மெஷினுக்கு இன்று பிறந்த நாள் ; 1967ம் ஆண்டு இதே ஜூன் 27ம் தேதி 


ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஷெப்பர்டு பரன் கண்டு பிடித்த ஏடிஎம் எந்திரம் முதன் முறையாக கடந்த 1967ம் ஆண்டு இதே ஜூன் 27ம் தேதிதான் வடக்கு லண்டனில் பார்கிளேஸ் வங்கி கிளையில் பொருத்தப்பட்டது. அப்போது பிளாஸ்டிக் கார்டு கண்டுபிடிக்கப்படவில்லை. ரசாயன குறியிடப்பட்ட சிறப்பு செக் அடிப்படையாகக் கொண்டு அந்த ஏடிஎம் கரன்சியை வழங்கியது.
இந்த செக்கை ஒரு டிராயரில் வைத்துவிட்டு தனி அடையாள குறியீட்டை (பின் நம்பர்) தெரிவித்தால் மற்றொரு டிராயரில் பிரிட்டிஷ் பவுண்டு வரும். மேலும், 6 இலக்க பின் நம்பரை பதிவு செய்யும் வகையில் ஏடிஎம்மை வடிவமைத்திருந்தார். அதை நினைவில் வைத்துக் கொள்வதற்கு சிரமமாக இருப்பதால் 4 இலக்கமாகக் குறைத்து வடிவமைத்தார். பின்னர் பிளாஸ்டிக் கார்டை பயன்படுத்தும் முறை அறிமுகம் செய்யப்பட்டது.
இனி ஏ டி எம் பற்றி கொஞ்சம் அடிசினல் தகவல்;
ஏடிஎம் போல ஒரு மெஷின் தயாரிக்க வேண்டும் என ஜப்பான், ஸ்வீடன், அமெரிக்கா, இங்கிலாந்து என பல நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு முயன்றன. இருந்தாலும் அந்த பெருமையைத் தட்டிக் கொண்டு போனது “லூத்தர் ஜார்ஜ் சிம்ஜியன்” என்பவர் தான். 1939 களுக்கு முன்பே அவர் இந்த முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் அதற்கான காப்புரிமையை 1963ல் தான் பெற்றார் !
1939 ம் ஆண்டு நியூயார்க்கில் “சிட்டி பேங்க் ஆஃப் நியூயார்க்” ஒரு மெஷினை வைத்தது. அதை “பேங்கோகிராஃப்” என்று அழைத்தார்கள். நமது ஏ.டி.எம் களின் முன்னோடி என்று அதைச் சொல்லலாம். ஆனாலும் அதில் பணம் பட்டுவாடா செய்யும் வசதி இருக்கவில்லை. டெபாசிட் செய்யும் வசதி மட்டுமே இருந்தது. ஆனாலும் இதை மக்கள் விரும்பவில்லை. எனவே ஆறே மாதத்தில் மூட்டையில் கட்டி பரணில் போட்டார்கள்.பணம் பட்டுவாடா செய்யும் மெஷின் தனது கணக்கைத் துவங்கியது 1966ம் ஆண்டு, டோக்கியோவில். அதற்கு அடுத்த வருஷம் அது ஸ்வீடனிலும் சுவடை எடுத்து வைத்தது !
1967ம் ஆண்டுதான் இப்போதைய வகையான ஏடிஎம் மெஷினை உருவாக்கினார்கள். ஆனாலும் அப்போதைய அந்த ஏடிஎம் மெஷினுக்கும் இப்போதைய மெஷினுக்கும் ஏணி என்ன ? ராக்கெட் விட்டால் கூட எட்டாத அளவுக்கு இடைவெளி இருந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.1972ம் ஆண்டு யூகேவில் அறிமுகமான ஏ.டி.எம் தான் இன்றைய நவீன ஏடிஎம் களின் ஒத்த ஸ்டைல் பணிகளைச் செய்தது எனலாம்.      
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo