Onetamil News Logo

பிரிட்ச் ரெப்ரிஜிரேட்டர் கம்ப்ரசர் வெடித்து மூன்று பேர் மூச்சுத் திணறி பலி

Onetamil News
 

பிரிட்ச் ரெப்ரிஜிரேட்டர் கம்ப்ரசர் வெடித்து மூன்று பேர் மூச்சுத் திணறி பலி


சென்னையெடுத்து ஊரப்பாக்கத்தில் மின் கசிவு காரணமாக பிரிட்ச் வெடித்து மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது
                 சென்னை அருகே உள்ள ஊரப்பாக்கத்தில் பிரிட்ஜ் வெடித்து விபத்து ஏற்பட்டதில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விபத்தில் கிரிஜா (63), ராதா (55), ராஜ்குமார் (48), ஆகியோர் உயிரிழந்திருக்கிறார்கள். ஊரப்பாக்கப் பகுதியில் கோதண்டராமன் நகரில் வெங்கட்ராமன் என்பவர் உயிர் இழந்து ஓராண்டு கடந்த நிலையில் அவரது துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் கிரிஜா அவர்கள் தங்கை ராதா உறவினர் ராஜ்குமார் ஆகியோர் மூன்று பேரும் துபாயிலிருந்து சென்னை வந்ததாக சொல்லப்படுகிறது. இவர்கள் மூவரும் நேற்று இரவு தனியறையில் தூங்கிய நிலையில் அறையில் இருந்து புகையாக வந்திருக்கின்றது. இதனால் பக்கத்து அறையில் தூங்கிய பார்க்கவி என்பவர் சந்தேகமடைந்து எழுந்து மூன்று பேரும் தூங்கி அறையை திறக்க முயன்றுள்ளார் ஆனால் கதவை அப்போது திறக்க முடியவில்லை, இதனை தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்து இருக்கின்றனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கதவை உடைத்து பார்த்த பொழுது, மூன்று பேரும் சடலமாக இருந்துள்ளனர். விபத்து ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரெப்ரிஜிரேட்டர் கம்ப்ரசர் வெடித்து  மூன்று பேரும் தீயில் கருகி இறந்தது தெரிய வந்தது.மேலும் இது விபத்தில் பலத்த காயமடைந்த பாரதி குழந்தை ஆராதையாம் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர் பிரிட்ஜ் படித்து மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கின்றது. மேலும், போலீசார் விசாரணை பேர் கொண்டு வருகிறார்கள். இங்கு உயிரிழந்த வெங்கட்ராமனின் வீடு கடந்த ஒரு ஆண்டாக போட்டிய நிலையில் இருந்திருக்கிறது இதனால் ஒரு ஆண்டுக்கு பின் பிரிட்ஜ் உள்ளிட்டவை பயன்படுத்தியதால் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது சம்பவம் குடும்பத்தினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
Onetamil News Logo