Onetamil News Logo

தூத்துக்குடி முதல் புத்தகத் திருவிழாவில் ரூ.80.00 இலட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை 

Onetamil News
 

தூத்துக்குடி முதல் புத்தகத் திருவிழாவில் ரூ.80.00 இலட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை 



தூத்துக்குடி அக்டோபர் 12 ; 
தூத்துக்குடி மாவட்ட புத்தகத் திருவிழா குழு மற்றும் பபாசி சார்பில் முதன் முறையாக “தூத்துக்குடியில் முதல் புத்தகத் திருவிழா” வானது தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி திடலில் 02.10.2017 அன்று துவக்கப்பட்டு 11.10.2017 வரை 10 நாட்கள் சிறப்பாக நடைபெற்றது.
மேற்படி வளாகப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கலையரங்கத்தில் முதல் நாள் நிகழ்ச்சியானது 02.10.2017 அன்று மாலை தூத்துக்குடி அரசு இசைப்பள்ளி மாணவர்களின் மங்கள இசையுடன் துவக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் என். வெங்கடேஷ்  புத்தகத் திருவிழாவினை துவக்கி வைத்து தலைமையுரை வழங்கினார்கள். மாநகராட்சி ஆணையர்  ஆல்பி ஜான் வர்க்கீஸ் வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பெ.மகேந்திரன் ., தூத்துக்குடி சார் ஆட்சியர்  தீபக் ஜேக்கப் , உதவி காவல் கண்காணிப்பாளர் எஸ். செல்வரத்தினம் ., உதவி ஆட்சியர் (பயிற்சி)  எஸ். சரவணன்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். பபாசி  மேனாள் தலைவர்  எஸ்.எம். மீனாட்சி சோமசுந்தரம், அசோசியேட் இணைச் செயலாளர்  முல்லை பழனி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட ஊரக வளர்ச்சி மகமையின் திட்ட இயக்குனர் வே.பிச்சை நன்றி கூறினார்.
தூத்துக்குடி மாவட்ட புத்தகத் திருவிழா குழு சார்பில் நடைபெற்ற தூத்துக்குடி முதல் புத்தகத் திருவிழாவில் மொத்தம் 106 அரங்குகள் அமைக்கப்பட்டு 92 அரங்குகள் புத்தக விற்பனைக்கும் 14 அரங்குகள் அரசுத்துறைகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
70 பதிப்பகங்களின் சார்பில் சுமார் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் அரங்குகளில் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. தமிழ், ஆங்கில புத்தகங்கள் மற்றும் மல்டி மீடியா (குறுந்தகடுகள்), கலை, இலக்கியம், சங்க இலக்கியம், சமூக நாவல்கள், சாpத்திர நாவல்கள், மருத்துவம், சமையல், தன்னம்பிக்கை, சுய முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு வகையிலான புத்தகங்கள், அரசு வேலை வாய்ப்புக்கான தகுதித்தேர்வு புத்தகங்கள், ஐஏஎஸ்,ஐபிஎஸ்  தேர்வுகள், டெட் ,ஸ்லெட் ,டிஎன்பிஎஸ்சி,யுபிஎஸ்சி   உள்ளிட்ட அனைத்து தேர்வுகளுக்கான புத்தகங்கள், சிறு குழந்தைகளுக்கான காமிக்ஸ் புத்தகங்கள், பல வண்ண சிறுகதைப் புத்தகங்கள் என ரூ. 10/- முதல் ரூ. 1,000/- வரையிலான புத்தகங்கள் அனைத்தும் ஓரே கூரையின் கீழ் கிடைக்கும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. 
புத்தகக் கண்காட்சியில் அனைத்து புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி வழங்கப்பட்டதுடன் சில புத்தகங்களுக்கு 20% தள்ளுபடி சம்பந்தப்பட்ட பதிப்பாளர்களால் வழங்கப்பட்டது.
தினந்தோறும் காலை 11.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நடைபெற்ற தூத்துக்குடி முதல் புத்தகத் திருவிழாவில் இலவச நுழைவு அனுமதி மற்றும் இலவச பார்க்கிங் வசதி செய்யப்பட்டிருந்ததுடன் சுமார் 1,000 பேர் அமரக் கூடிய வகையில் கலையரங்கம் அமைக்கப்பட்டு தினந்தோறும் கலை நிகழ்ச்சிகளும் அறிஞர்கள் சான்றோர்களின் சொற்பொழிவுகளும் பட்டிமன்றம், இயல் இசை மன்றம் ஆகியனவும் நடைபெற்றன.
புத்தகக் கண்காட்சியில் வங்கிகளின் சார்பாக தற்காலிக ஏடிஎம்  அமைக்கப்பட்டது. ஏடிஎம் கார்டு   கொண்டு வந்து அல்லது ஆதார் எண் தெரிவித்து ரூ.10,000/- வரை ரொக்கமாக பெற்றுக் கொள்ளும் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தது பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. மாநகராட்சி சார்பில் இலவச குடிநீர் வசதி, கழிப்பறை வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தது. ஆவின் நிர்வாகம் சார்பில் பால், ஐஸ்கிரிம் உள்ளிட்ட ஆவின் தயாரிப்பு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன.
அரசின் நலத்திட்டங்களை விளக்கும் வகையிலும் மாணவ மாணவியர்களுக்கு பலன் தரும் வகையிலும் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை, காவல்துறை, தூத்துக்குடி மாநகராட்சி, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனை, பொது சுகாதாரத்துறை, பேரிடர்  மேலாண்மை, சமூக பாதுகாப்புத் திட்டம் மற்றும் சமூக நலத்துறை, தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், தமிழ்நாடு சால்ட் கார்ப்பரேசன் ஆப் இந்தியா, சிறுசேமிப்புத் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, சாலை பாதுகாப்பு, மாவட்ட எய்ட்ஸ் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியவற்றின் சார்பாக அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. புத்தகத் திருவிழாவின் துவக்க நாளில் தோட்டக்கலைத்துறையின் சார்பில் காய்கறிகள் பழங்கள்  மூலம் அமைக்கப்பட்டிருந்த சேவல், மயில், மான், ஆமை உருவ பிரதிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
தூத்துக்குடி முதல் புத்தகத் திருவிழாவினை 17 கல்லூhpகள் மற்றும் 290 பள்ளிகளைச் சேர்ந்த 31,145 மாணவர்களும் 18,000 பொதுமக்களும் கண்டுகளித்ததுடன், ஆர்வமுடன் புத்தகங்களை வாங்கிச் சென்றனர். புத்தகத் திருவிழாவில் ரூ.80.00 இலட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பபாசி  இணைச் செயலாளர்  எஸ்.கே.முருகன் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.
புத்தகக் கண்காட்சியில் புத்தகங்களை வாங்கி மாணவர்களுக்கு இலவசமாக புத்தகங்களை வழங்க விரும்புவர்களின் கோரிக்கையினை நிறைவேற்றும் விதமாக “BOOK ON THE WALL  ” என்னும் பெட்டியில் புத்தகம் இடும் திட்டம், புத்தக அரங்கின் நுழைவு வாயிலில் 04.10.2017 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர்  என்.வெங்கடேஷ்  துவக்கப்பட்டது. மாவட்ட ஆட்சித் தலைவரின் உன்னதமான இத்திட்டத்தினை அனைவரும் பாராட்டியதுடன் பொதுமக்களும், மாணவர்களும் மிகவும் ஆர்வமுடன் இப்பெட்டியில் புத்தகங்களை வழங்கினர். 
முத்தாய்ப்பாக 10.10.2017 அன்று புத்தகத் திருவிழாவிற்கு பட்டிமன்றத்திற்கு வருகை தந்த கலைமாமணி முனைவர்  கு. ஞானசம்பந்தம் , பட்டிமன்றத்தின் ஆரம்பத்தில், புத்தகத் திருவிழா அரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவரால் துவக்கி வைக்கப்பட்ட “BOOK ON THE WALL ” என்ற இந்த திட்டத்தினை வெகுவாக பாராட்டியதோடு, இத்திட்டம் இதுவரை எங்குமே பார்த்திராத சிறப்பான திட்டம் என்றும் இது ”கலைமகள் உண்டியல்” என்றும் குறிப்பிட்டார். மேலும், பட்டிமன்றத்திற்கு முன்னதாக தானும் புத்தகங்களை “BOOK ON THE WALL ” பெட்டியில் இட்டு தனது பங்களிப்பினை செலுத்தினார்.
மேலும், தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் அரசு முதன்மைச் செயலருமான  குமார் ஜெயந்த்  10.10.2017 அன்று புத்தகத் திருவிழா அரங்கிற்கு வருகை தந்து அரங்கினைப் பார்வையிட்டார். புத்தகக் திருவிழாவில் நிறுவப்பட்டுள்ள அரசுத்துறைகளின் அரங்குகளையும் பார்வையிட்டார். தனது பங்களிப்பாக புத்தகங்களை “BOOK ON THE WALL ” பெட்டியில் செலுத்தினார். மாவட்ட ஆட்சித் தலைவர்  என்.வெங்கடேஷ்  சார் ஆட்சியர்  தீபக் ஜேக்கப்  உதவி ஆட்சியர் (பயிற்சி) எஸ். சரவணன் ஆகியோர் உடனிருந்தனர். இந்த புத்தகங்கள் அரசு பள்ளிகளுக்கோ அல்லது அரசு மாணவர் / மாணவியர் விடுதிகளுக்கோ இலவசமாக வழங்கப்பட உள்ளன.
தூத்துக்குடி முதல் புத்தகத் திருவிழாவில் தினந்தோறும் காலை 11.00 மணி முதல் பள்ளி மற்றும் கல்லூரி களின் கலை நிகழ்ச்சிகள், பயிலரங்கம் ஆகியன நடைபெற்றன. மாணவ மாணவியர்களின் கண்கவரும் குழு நடனம், தனி நடனங்கள், மெல்லிசை இசைத்தல், பட்டிமன்றங்கள், தனிப்பேச்சுக்கள், சிலம்பாட்டம் ஆகியன பார்வையாளர்களின் மனதை கொள்ளை கொள்வதாக அமைந்திருந்தது.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo