Onetamil News Logo

 பிரபல மாடல் அழகி மயங்கி விழுந்து மரணம் ;பேஷன் ஷோவின் போது கேட்வால்க் எனப்படும் பூனை நடையின் போது அதிர்ச்சி

Onetamil News
 

 பிரபல மாடல் அழகி மயங்கி விழுந்து மரணம் ;பேஷன் ஷோவின் போது கேட்வால்க் எனப்படும் பூனை நடையின் போது அதிர்ச்சி


பிரேசில்  2019 ஏப்ரல் 29 ;  பிரேசிலில் நடந்த பேஷன் ஷோவில் பிரபல மாடல் அழகி மயங்கி விழுந்து மரணம் அடைந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
பிரேசிலில் உள்ள சாவோ பாலோ நகரில் பேஷன் ஷோ நடைபெற்றது. இதில் பிரபல பிரேசில் மாடல் அழகி டெல்ஸ் ரோரஸ் கலந்துக் கொண்டார். பேஷன் ஷோவின் போது கேட்வால்க் எனப்படும் பூனை நடை நடந்து விட்டு திரும்பினார். அப்போது திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் மயங்கி விழுந்தார்.அவருடைய முகம் பகுதியில் பலத்த காயம் நேரிட்டது. ஆனால் அங்கிருந்தவர்கள் நிகழ்ச்சியின் ஒருபகுதியாக இருக்கும் என அப்படியே இருந்து விட்டனர். ஆனால் சுதாரித்துக் கொண்ட நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் விரைந்து சென்று உடனடியாக ரோரஸை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இறந்து விட்டார் எனக் கூறியுள்ளனர். இச்சம்பவம் அங்கு அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo