இந்திரசக்தி விநாயகர் ஆலய சதுர்த்தியை முன்னிட்டு மாட்டு வண்டி போட்டி ; மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.சரவணக்குமார் டேவிஸ்புரத்தில் தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி 2023 செப் 23 ; தூத்துக்குடி தாளமுத்துநகர் இந்திரசக்தி விநாயகர் ஆலய சதுர்த்தியை முன்னிட்டு மாட்டு வண்டி போட்டி மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் துவங்கி வைத்தார்
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி, தாளமுத்துநகர், இந்திராநகர், தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ இந்திரசக்தி விநாயகர் ஆலய சதுர்த்தி விழாவை முன்னிட்டு, இந்திரா நகர் பொதுமக்கள் மற்றும் இளைஞரணி இணைந்து நடத்தும் 15ம் ஆண்டு மாட்டு வண்டி போட்டி நடைபெற்றது.
டேவிஸ்புரம் முதல் தருவைகுளம் வரை எல்லை பந்தயம் நிர்ணயிக்கப்பட்ட மாட்டு வண்டி போட்டியை மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும், கூட்டுறவு கடன் சங்க தலைவருமான தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சரவணக்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் பூஞ்சிட்டு மாட்டு வண்டி 5 மைல் தூரம் வரை நடைபெற்றது. மொத்தம் 53 ஜோடி மாட்டு வண்டிகள் இந்த மாட்டு வண்டி போட்டியில் கலந்து கொண்டன.
விழாவிற்கு தெற்கு மாவட்ட திமுக மாணவரணி துணை அமைப்பாளரும், ஊராட்சி மன்ற உறுப்பினருமான தங்கமாரிமுத்து, ஒன்றிய திமுக துணை செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட திமுக பிரதிநிதி தர்மலிங்கம், ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர், திமுக கிளை செயலாளர் பொன்னுச்சாமி, ஊர் தலைவர் தர்மராஜ், செயலாளர் ஆறுமுகச்சாமி, பொருளாளர் தங்கராஜ், திமுக இளைஞரணி கௌதம் உள்பட ஊர் பொதுமக்கள் மற்றும் சுற்றுவட்டார மாட்டு வண்டி போட்டி ரசிகர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.