தேனி, திருக்குவளை, திருப்பூர் ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மேலாண்மைக்குழு தலைவராக பொறுப்பேற்க விருப்பமுடைய தொழில் நிறுவனங்கள் 26.02.2021க்குள் விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், தகவல்
தூத்துக்குடி 2021 பிப்ரவரி 22 ;தேனி, திருக்குவளை, திருப்பூர் ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மேலாண்மைக்குழு தலைவராக பொறுப்பேற்க விருப்பமுடைய தொழில் நிறுவனங்கள் 26.02.2021க்குள் விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது அறிவிப்பு ;தமிழ்நாட்டிலுள்ள 32 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை மேம்படுத்திட தொழிற் நிறுவனங்களின் உதவியுடன் பொது தனியார் கூட்டமைப்பு முறை என்ற திட்டம் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கும் ரூ.2.5 கோடி ரூபாய் வட்டியில்லாக் கடனாக மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு தொழிற்பயிற்சி நிலைய மேலாண்மைக்குழு என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு இக்குழுவின் தலைவராக தொழில் நிறுவனத்தைச் சேர்ந்த பிரதிநிதி செயல்படுவார்கள். ரூ.2.5 கோடி செலவினத்தில் ஒவ்வொரு தொழிற்பயிற்சி நிலையத்திலும் வழங்கப்படும் தொழிற்பயிற்சியினை சிறப்புற வழங்கி இதன் மூலம் தொழில் நிறுவனங்களின் தேவைக்குத் தகுந்த திறன்மிக்க பயிற்சியாளர்களை உருவாக்க வேண்டும் என்ற இந்த திட்டத்தின் கீழ் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களின் மேலாண்மைக்குழு தலைவராக செயல்பட்டு உரிய திட்டங்களை வகுத்து, வழங்கப்பட்ட நிதியை சிறப்பாக செலவு செய்து தொழிற்பயிற்சி நிலையத்தையும் தொழிற்பயிற்சியையும் மேம்படுத்தி சிறப்பான தொழிற்பயிற்சி நிலையமாக மாற்றும் நோக்கத்தில் இத்திட்டத்தில் பங்குகொள்ள விருப்பமுடைய தொழில் நிறுவனங்களிடமிருந்து விருப்பம் கோரப்படுகிறது. தேனி, திருக்குவளை, திருப்பூர் ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பொறுப்பேற்க விருப்பமுடைய தொழில் நிறுவனங்கள் பிற மாவட்டங்களைச் சேர்ந்த நிறுவனங்களாகவும் இருக்கலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களை www.tenders.tn.gov.in என்ற இணையதள முகவரியில் 26.02.2021 கடைசி தேதியாக உள்ள tender விபரத்தில் தேடிப்பெறலாம். இணையதளத்தில் உள்ள படிவத்தினை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து இயக்குநர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, ஆலந்தூர் ரோடு, கிண்டி, சென்னை-32 என்ற முகவரியில் பெறப்படவேண்டிய கடைசி நாள்:26.02.2021 ஆகும். மேலும், விபரங்களைப்பெற 044-22501083, 044-22500099 மற்றும் 044-22500199 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டும் விபரங்களைப் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், தெரிவித்துள்ளார்.