Onetamil News Logo

1 கிலோ மிளகாய் வத்தலை ரூ‌.160 வாங்கிச் சென்று சந்தைகளில் ரூ.250 வரை வியாபாரம் செய்து அதிக இலாபம் விளைச்சல் இருக்கு... விலை இல்லை விளாத்திகுளம் பகுதி விவசாயிகள் வேதனை

Onetamil News
 

1 கிலோ மிளகாய் வத்தலை ரூ‌.160 வாங்கிச் சென்று சந்தைகளில் ரூ.250 வரை வியாபாரம் செய்து அதிக இலாபம் விளைச்சல் இருக்கு... விலை இல்லை விளாத்திகுளம் பகுதி விவசாயிகள் வேதனை


வேம்பார் மார்ச் 27: விளாத்திகுளம் பகுதியில் மிளகாய் பயிரிட்டு தற்போது மகசூல் எடுக்கும் நேரம் என்பதால் மிளகாய் பழங்களை பறித்து காயவைத்து... அதனை பராமரிக்க படாதபாடு படுகின்றனர். ஆனாலும் விளைச்சல் கடந்த ஆண்டுகளை விட விளைச்சல் அதிகமாக இருந்தாலும் விலையில்லாததால் வேதனையடைந்துள்ளனர்.
                  மிளகாய் வத்தலுக்கு பேர் பெற்ற தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ளபகுதிகளில்  இந்தாண்டு மிளகாய் வத்தல் நல்ல விளைச்சலை தந்துள்ளது.
        இருந்தாலும் 1கிலோ ரூ.160க்கு விவசாயிகளிடம் இருந்து  வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.
 ஆனால் வியாபாரிகள் இரண்டு மூன்று மடங்கு அதிக விலைக்கு விற்கின்றனர்.
தங்களின் உழைப்புக்கு ஏற்ற போதிய விலை கிடைக்கவில்லை என்று விவசாயிகள் வேதனைப்படுகின்றார்.
மேலும் மிளகாய் வத்தலை வைப்பதற்கு புதிய இட வசதி இல்லாததால், இப்பகுதியில் தமிழக அரசு குளிர்சாதன வசதியுள்ள கட்டங்கி அமைத்துத் தந்து அரசே கொள்முதல் செய்தால் தங்களுக்கு உரிய விலை கிடைக்கும். தங்களின் வாழ்வாதரம் மேம்படும் என்கின்றனர் விவசாயிகள்.
இன்றல்ல... நேற்றல்ல... பல ஆண்டுகளாக விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறாமலே உள்ளது.
விவசாயிகளின் சூழல் அறிந்து அரசு நடவடிக்கை எடுக்குமா என்பதே இப்பகுதி விவசாயிகளின் எண்ணப்பதிவாகும். எண்ணம் நிறைவேறுமா இல்லை இதே நிலைதான் தொடருமா எல்லாம் அவர்கள் கையில்.
 ஆண்டுதோறும் விவசாயிகள் அதிகளவில் மிளகாய் வத்தல் சாகுபடி செய்து வருகின்றனர். இப்பகுதியில் விளைவிக்கப்படும் மிளகாய் வத்தல் வெளிமாநிலங்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக போதிய மழையின்மை காரணமாக விளைச்சல் சற்று குறைவாகவே இருந்துவந்தது.
இந்நிலையில்  இந்தாண்டு பெய்த போதுமான பருவமழையின் காரணமாக இப்பகுதியில் ஓரளவு மிளகாய் வத்தல் விளைச்சல் இருந்தாலும்... அதற்கான உரிய விலை கிடைக்கவில்லை என்றும், 1 கிலோ மிளகாய் வத்தலை ரூ‌.160 வாங்கிச் சென்று சந்தைகளில் ரூ.250 வரை வியாபாரம் செய்து அதிக இலாபம் பார்ப்பதாகவும் விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர். மேலும் விளாத்திகுளம் பகுதியில் விளைவிக்கப்படும் மிளகாய் வத்தலை  வைப்பதற்கு போதுமான இடவசதி இல்லாததால் இப்பகுதியில் தமிழக அரசு விவசாயிகளின் நலன் கருதி ஏ.சி.குடோன் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றும்... அதுமட்டுமின்றி வியாபாரிகளால் சுரண்டப்படும் விவசாயிகளை பாதுகாக்க அரசே கொள்முதல் நிலையங்கள் அமைத்து நேரடியாக விவசாயிகளிடமிருந்து மிளகாய் வத்தலை கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக அரசின் தற்போதைய வேளாண் பட்ஜெட் கூட்டத்தொடரில்... கூட விளாத்திகுளம் மிளகாய் வத்தலுக்கு புவிசார் குறியீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருக்கும் நிலையில், அதற்கு அடிப்படையாக விளங்கும் மிளகாய் வத்தலை பாதுகாக்க தமிழக அரசு துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு இப்பகுதியில் குளிர்சாதன வசதி கூடிய குடோன் வசதி ஏற்படுத்த வேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகளின் தலையாய கோரிக்கையாக உள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo