ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் அலுவலர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு நிகழ்வு
தூத்துக்குடி ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் அலுவலர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு நிகழ்வு நடைபெற்றது
தூத்துக்குடி ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரி, மற்றும் கோவை ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இணைந்து 29.08.2023 முதல் 02.09.2023 வரை ஐந்து நாள்கள் பணித்திறன் மேம்பாட்டு நிகழ்வு நடைபெற்றது.
கல்லூரி பொறுப்பு முதல்வர் முனைவர் மோனிகா ராம்ராஜ், வரவேற்புரை வழங்கினார்.
ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர்கள் முனைவர் ஹேமலதா வணிகவியல்துறை டீன் அவர்கள் ‘நிதி முதலீடுகள்’ என்ற தலைப்பிலும், முனைவர் சரவணகுமார் வணிகவியல் துறைத்தலைவர் அவர்கள் ‘பரஸ்பர நிதி மற்றும் சேமிப்பு திட்டங்கள்’ என்ற தலைப்பிலும், முனைவர் மகேஷ் பாலகிருஷ்ணன் வணிகவியல் துறைத்தலைவர் ‘மன அழுத்த நேர ஈடுபாடு மேலாண்மை’ என்ற தலைப்பிலும் அமல் பிரான்கோ, மனித வள மேம்பாட்டு மேலாளர் அவர்கள் அலுவலக ‘எக்ஸல் அடிப்படைகள், மேலாண்மை தகவல் அமைப்பு’ என்ற தலைப்பிலும் பணித்திறன் மேம்படுத்துவதற்கான பயிற்சி அளித்தனர். உள்தர கட்டுப்பாட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர், முனைவர் தி.லில்லிகோல்டா அவர்கள் நன்றியுரை நல்கினார் .
இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை உள்தர கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து செய்திருந்தனர்.