Onetamil News Logo

சசிகலாவுக்கு 5 நாள் பரோல் வழங்கியது கர்நாடக சிறைத்துறை

Onetamil News
 

சசிகலாவுக்கு 5 நாள் பரோல் வழங்கியது கர்நாடக சிறைத்துறை


பெங்களூரு ;   பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா பரோலில் விடுவிக்கப்பட்டார். சசிகலாவுக்கு 5 நாள் பரோல் வழங்கி பெங்களூரு சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது. பரோல் வழங்கப்பட்ட நிலையில் இன்று இரவு சசிகலா சென்னைக்கு வருகிறார். இன்று மாலை பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் சசிகலா சென்னைக்கு வருகிறார். மேலும்  சசிகலா ஆதரவாளர்கள் அனைவரும் சென்னை விமான நிலையத்திற்கு வரும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னைக்கு வரும் சசிகலா தியாகராய நகரில் உள்ள உறவினர் வீட்டில் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மருத்துவமனையில் கணவர் நடராஜனை பார்க்கவும், வீட்டில் தங்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கட்சி தொண்டர்கள் யாரையும் சந்திக்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo