மாடு மற்றும் கன்றுக்குட்டியை திருடியவர் கைது - ரூபாய் 60,000/- மதிப்புள்ள மாடு மற்றும் கன்றுக்குட்டி மீட்பு
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மாடு மற்றும் கன்றுக்குட்டியை திருடியவர் கைது - ரூபாய் 60,000/- மதிப்புள்ள மாடு மற்றும் கன்றுக்குட்டி மீட்க்கப்பட்டது.
கோவில்பட்டி மேட்டுத் தெருவை சேர்ந்த கண்ணன் மகன் இசக்கித்துரை (23) என்பவர் தனது வீட்டில் மாடுகள் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 24.06.2022 அன்று கோவில்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்பட்டி பாரதியார் நகர் பகுதியிலுள்ள ஒரு கோவிலின் அருகே மேய்ச்சலுக்கு விட்டிருந்தபோது ஒரு மாடு மற்றும் கன்றுக்குட்டி காணாமல் போயுள்ளது.
இதுகுறித்து இசக்கித்துரை நேற்று (25.06.2022) அளித்த புகாரின் பேரில் பேரில் கோவில்ட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், கோவில்பட்டி துறையூர் பகுதியை சேர்ந்த சண்முகராஜ் மகன் மாரிமுத்து (21) என்பவர் மேற்படி இசக்கித்துரையின் மாடுகளை திருடியது தெரியவந்தது.
உடனடியாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் சத்யா அப்பகுதியைச் சார்ந்த மாரிமுத்துவை கைது செய்து அவரிடமிருந்த ரூபாய் 60,000/- மதிப்புள்ள மாடு மற்றும் கன்றுக்குட்டியை மீட்டார்.