Onetamil News Logo

கொலை, கொலை முயற்சி, திருட்டு வழக்கு உட்பட 17 வழக்குகளில் ஈடுபட்ட பிரபல ரவுடி கைது - சிப்காட் காவல் நிலைய போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டு

Onetamil News
 

கொலை, கொலை முயற்சி, திருட்டு வழக்கு உட்பட 17 வழக்குகளில் ஈடுபட்ட பிரபல ரவுடி கைது - சிப்காட் காவல் நிலைய போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டு


தூத்துக்குடி 2021 ஜூலை 25 ;தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை, கொலை முயற்சி, திருட்டு வழக்கு உட்பட 17 வழக்குகளில் ஈடுபட்ட பிரபல ரவுடி கைது - சிப்காட் காவல் நிலைய போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டு தெரிவித்தார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவுப்படி தூத்துக்குடி ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் பொன்னரசு மேற்பார்வையில் சிப்காட் காவல்நிலைய ஆய்வாளர் வேல்முருகன் தலைமையில் உதவி ஆய்வாளர் ஹென்சன் பால்ராஜ் மற்றும் போலீசார் நேற்று (24.07.2021) ரோந்து பணியில் ஈடுபட்ட போது சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி எட்டயபுரம் சாலை பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த தூத்துக்குடி மில்லர்புரம் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் ஜெயக்குமார் (27) என்பவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரிடம் பணம் கேட்டு தராததால் கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. உடனே மேற்படி போலீசார் அவரை கைது செய்தனர்.
இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஹென்சன் பால்ராஜ் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
 ஜெயக்குமார் மீது ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி உட்பட 12 வழக்குகளும், தூத்துக்குடி வடபாகம், சிப்காட், தூத்துக்குடி மத்தியபாகம், ஆகிய காவல் நிலையங்களில் தலா ஒரு வழக்கும், எப்போதுவென்றான் காவல்நிலையத்தில் 2 வழக்குகள் என மொத்தம் 17 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட பிரபல ரவுடியை கைது செய்த சிப்காட் காவல் நிலைய போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுவாக பாராட்டினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo