Onetamil News Logo

எட்டயபுரம் அருகே  சென்டர் மீடியனில் கார்  மோதி முன்னாள் ராணுவ வீரர் மகளுடன் பரிதாபமாக பலி  ;2  பெண்கள் படுகாயம் 

Onetamil News
 

எட்டயபுரம் அருகே  சென்டர் மீடியனில் கார்  மோதி முன்னாள் ராணுவ வீரர் மகளுடன் பரிதாபமாக பலி  ;2 பெண்கள் படுகாயம் 


தூத்துக்குடி 2018 ஏப்ரல் 15 ;எட்டயபுரம் அருகே  சென்டர் மீடியனில் கார்  மோதி முன்னாள் ராணுவ வீரர் மகளுடன் பரிதாபமாக பலி  ;2  பெண்கள் படுகாயம்  அடைந்தனர்.
கரூர் மாவட்டம் புகலூர் அருகில் உள்ள டி.என்,பி.எல் பேப்பர் மில் அருகில் உள்ள வேலாயுதபாளையம் கிராமத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்  ராஜேந்திரன் (48)  இவர் அங்கு உள்ள அரசு மருத்துவமனையில் ஓட்டுநராக பணி செய்கிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (43).இவர்களது மகள்கள் வாணவி (18) கமலினி 9 ம் வகுப்பு முடித்துள்ளார் (14) இவர்கள் அங்குள்ள பள்ளியில்  படித்து வருகின்றனர்.இதில் வானவி 12 வகுப்பு முடித்துள்ளார்.                                                       
திருச்செந்துார் முருகன் கோவிலுக்கு காரில் சாமி கும்பிட திருச்செந்துார் சென்று கொண்டிருந்த போது இன்று அதிகாலையில்  துாத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட மாசார்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட தாப்பாத்தி கிராமத்திற்கும் மேல்மாந்தை கிராமத்திற்கும் இடையே   கார் வரும் போது கார் திடீரென சாலையில் உள்ள  செண்டர் மீடியனில் மோதி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது இதில்  தந்தை மகள் ஆகியோர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர்.                                                                          
                                            
இந்த காரில் வந்த ராஜேந்திரன் மனைவி விஜயலெட்சுமி அவர்களது மகள் கமலினி ஆகியோர் படுகாயத்துடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  
இந்த சம்பவம் குறித்து மாசார்பட்டி காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo