Onetamil News Logo

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி-க்கு விருது

Onetamil News
 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி-க்கு விருது 


தூத்துக்குடி 2019 ஆகஸ்ட் 22 ;தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக பணி செய்யும் சந்திப் நந்தூரி-க்கு விருது வழங்கப்பட்டது. 
மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றியதன் காரணமாக  திருநெல்வேலி மாவட்டத்தின் கிராமங்களில் "தாமிரபரணி ஆறு தூய்மை பணியை துவக்கி வைத்ததற்க்கு "   கலெக்டருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. விழாவில் 15 மாவட்ட ஆட்சியர்களுக்கு விருது வழங்கப்பட்டது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அவர்களால் இந்தியன் எக்ஸ்பிரஸ் எக்ஸலன்ஸ் ஆஃப் கவர்னன்ஸ் விருதுகளை திருநெல்வேலி மாவட்டத்தில் பணி செய்த அப்போதைய ஆட்சியர் சந்திப் நந்தூரி க்கு டெல்லி விழாவில் மத்திய அமைச்சர் விருது வழங்கினார். தற்சமயம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக பணி செய்யும் சந்திப் நந்தூரி க்கு விருது வழங்கப்பட்டது.  
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த போது, கீழப்பாவூர் ஒன்றியம், பூலாங்குளம் கிராமத்தில் ”தூய்மை பாரதம்” திட்டத்தின் கீழ், கழிவுநீர் சுத்திகரிப்பு, வடிகால் அமைத்தல், கழிவுநீரை உலர வைக்கும் நூறு குழிகள் அமைத்தல், தனி நபர் கழிப்பறை, சுத்தமான குடிநீர் உள்ளிட்ட திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியுள்ளார். மத்திய அரசின் தூய்மை பாரதம் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி, பூலாங்குளம் கிராமத்தை முன்மாதிரி கிராமமாக மாற்றியதற்காக பாராட்டி, இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் டெல்லியில் வைத்து விருது வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவராக இருக்கும் சந்தீப் நந்தூரி போன்று இந்தியா முழுவதும் பதினாறு மாவட்ட ஆட்சித்தலைவர்கள் சிறந்த நிர்வாகத்திற்கான விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 24 மாநிலங்களின் 84 மாவட்டங்களில் இருந்து 249 போட்டியாளர்கள் இவ்விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இடம் பிடித்தனர். அதிலிருந்து பதினாறு பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo