விடியா திமுக அரசை கண்டித்து எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை
ஆளுநர் மாளிகை நோக்கி செல்லும் அதிமுக பேரணி,முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் அதிமுகவினருக்கு அழைப்பு
தூத்துக்குடி 2023 மே 21 ;விடியா திமுக அரசை கண்டித்து எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ஆளுநர் மாளிகை நோக்கி செல்லும் அதிமுக பேரணியில் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்திலிருந்து நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும். தூத்துக்குடியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் அதிமுகவினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று (20.05.2023) மாலை தூத்துக்குடி டிஎஸ்எப் கிரண்ட் பிளாசா கூட்ட அரங்கில் வைத்து மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன்
கழகத்தில் உறுப்பினர் சேர்க்கை பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. புதிய உறுப்பினர்களாக இளைஞர்களை அதிகமாக கழகத்தில் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும்.
2 கோடி உறுப்பினர்களை இலக்காக கொண்டு பொதுச் செயலாளர் எடப்பாடியார் துவங்கிய பணியில் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் அதிகமான உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். மேலும், திமுக அரசு பொறுப்பேற்ற இரு ஆண்டுகளில் பல்வேறு முறைகேடுகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, கள்ளச்சாராயம், கஞ்சா போன்ற போதை பொருட்களின் புழக்கம் தடுக்க தவறிய விடியா திமுக அரசை கண்டித்து அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ஆளுநர் மாளிகை நோக்கி 22.05.2023 திங்கட்கிழமை அதிமுக சார்பில் மாபெரும் பேரணி நடைபெறுகிறது. திமுக அரசிற்கு பாடம் புகட்டிடும் வகையில் எழுச்சிமிக்க இந்த பேரணியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்திட வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் பேசினார்.
இந்நிகழ்வில் கழக அமைப்புச் செயலாளர் என். சின்னத்துரை, மாவட்ட கழக அவைத் தலைவர் வழக்கறிஞர் திருப்பாற்கடல், மாநில அமைப்புச் சாரா ஓட்டுநரணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் சுதாகர், ஸ்ரீவைகுண்டம் யூனியன் சேர்மன் வசந்தா மணி, ஒன்றியச் செயலாளர்கள் காசிராஜன், விஜயகுமார், ராஜ்நாரயணன், பகுதி கழகச் செயலாளர்கள் முருகன், முன்னாள் துணை மேயர் சேவியர், ஜெய்கணேஷ், சார்பு அணி செயலாளர்கள் நடராஜன், கே.ஜே.பிரபாகர், ஜெ. தனராஜ், பில்லா விக்னேஷ், சுதர்சன் ராஜா, அருண்ஜெபக்குமார், நகர கழக செயலாளர்கள் மகேந்திரன், காயல் மௌலானா, கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், முன்னாள் மேயர் அந்தோணி கிரேசி, மாநகராட்சி எதிர்க்கட்சி கொறடா வக்கீல் மந்திரமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர் சுடலைமணி, மாநில மீனவரணி துணை தலைவர் எரோமியாஸ், பேரூராட்சி கழக செயலாளர்கள் காசிராஜன், செந்தில்ராஜகுமார், ரவிச்சந்திரன், ஆறுமுக நயினார், துரைச்சாமி ராஜா, அசோக்குமார், செந்தமிழ்சேகர், கிங்சிலிஸ்டார்லின், குமரகுருபரன், கோபாலகிருஷ்ணன், வேதமாணிக்கம், நிர்வாகிகள் ஜோதிமணி, சத்யாலெட்சுமணன், திருச்சிற்றம்பலம், வக்கில்கள் பிள்ளை விநாயகம், முனியசாமி, சரவணபெருமாள், சுரேஷ்பாபு, ஆர்எம்கேஎஸ் சுந்தர், உரக்கடை குனசேகரன், மனுவேல்ராஜ், மாநகராட்சி கவுன்சிலர் வெற்றி செல்வன், சென்பகசெல்வன், வெங்கடேஷ், தலைமைக் கழக பேச்சாளர் முருகானந்தம், ஜான்சன் தேவராஜ், ஏகே மைதீன், இம்ரான், பண்டாரவிளை பாஸ்கர், பேய்குளம் முத்துராமன் மகாலிங்கம், பூந்தோட்டம் மனோகரன், குலசை சங்கரலிங்கம், அமிர்தாமகேந்திரன், செல்வக்குமார், நாசரேத் பெரியதுரை, அர்ஜூன், ஆர்எஸ் மணி, பி.ஜே.சி.சுரேஷ், எஸ்.கே.மாரியப்பன், ஹார்பர் பாண்டி, பூக்கடை வேலு, பிரபாகரன், ரத்னசபாபதி, திருத்துவசிங், அண்்ணாதொழிற்சங்கம் அருணாச்சலம், ஜவஹர், ஆனந்தராஜ், பால்துரை, வட்ட செயலாளர்கள் பூர்ணசந்திரன், ஜனார்த்தனன், சுப்பிரமணி, மகாராஜா, ராமச்சந்திரன், சுயம்பு, சந்திரசேகரன், சொக்கலிங்கம், எஸ்கே முருகன், கொம்பையா, அருண்ஜெயக்குமார், மணிவண்ணன், சந்தனபட்டு, அன்டோ, நியுக்கலாஸ், ராஜன், ரகுநாதன், ஜெகதீஸ்வரன், மணிகண்டன், அந்தோணி ராஜ், நவ்சாத், ஜெயக்குமார், உலகநாதபெருமாள், பிரவீன் ஜெயக்குமார், முருகேசன், ரவீந்திரன், டைமின்ராஜ், செல்வராஜ், கண்ணையா, யோவான், மாரிமுத்து, மற்றும் சுந்தரேஸ்வரன், பரிபூரணராஜா, பாலஜெயம், சாம்ராஜ், யுவன் பாலா மற்றும் மகளிர்கள் இந்திரா, அன்னத்தாய், தமிழரசி, ராஜேஸ்வரி, பானுமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.