Onetamil News Logo

9வது அகில இந்திய கல்லூரிகளுக்கிடையான கூடைப்பந்துப் போட்டி சென்னை லயோலா கல்லூரி அணி வெற்றி 

Onetamil News
 

9வது அகில இந்திய கல்லூரிகளுக்கிடையான கூடைப்பந்துப் போட்டி சென்னை லயோலா கல்லூரி அணி வெற்றி 


தூத்துக்குடி  2019 ஜூலை 21 ;டி.எம்.பி சுழற்கோப்பைக்காக 9வது அகில இந்திய கல்லூரிகளுக்கிடையான கூடைப்பந்துப் போட்டி சென்னை லயோலா கல்லூரி அணி வெற்றிபெற்றது.
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சுழற்கோப்பைக்காக 9வது அகில இந்திய கல்லூரிகளுக்கிடையான ஆண் மற்றும் பெண்கள் கலந்து கொள்ளும் மாபெரும் கூடைப்பந்துப் போட்டி இறுதி போட்டி நடந்தது.
இதில்  ஆடவருக்கான இறுதிப் போட்டியில் சென்னை லயோலா கல்லூரி அணியும் பெங்களூர் ஜெயின் பல்கலைக்கழக அணியும்  போட்டியிட்டது. அதில் சென்னை லயோலா கல்லூரி அணி –58 புள்ளிகள் எடுத்தது. ஜெயின் பல்கலைக்கழக அணி 40 புள்ளிகள் எடுத்தது. இதில் சென்னை லயோலா கல்லூரி அணி வெற்றி பெற்றது என்று அறிவிக்கப்பட்டது.
இதில் பெண்களுக்கான  இறுதிப் போட்டியில் சென்னை வைசுவா  கல்லூரி அணியும், சென்னை ஹிந்துஸ்தான்  பல்கலைக்கழக அணியும் போட்டியிட்டது. அதில் சென்னை வைசுவா  கல்லூரி அணி –60 புள்ளிகள் எடுத்தது. சென்னை ஹிந்துஸ்தான்  பல்கலைக்கழக அணி 44 புள்ளிகள் எடுத்தது. இதில் சென்னை வைசுவா  கல்லூரி அணி வெற்றி பெற்றது என்று அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சுழற்கோப்பைக்காக 9வது அகில இந்திய கல்லூரிகளுக்கிடையான ஆண் மற்றும் பெண்கள் கலந்து கொள்ளும் மாபெரும் கூடைப்பந்துப்போட்டி தூத்துக்குடி ஜிம்கானா கிளப், ராமகிருஷ்ணன் நினைவு மின்னொளி கூடைப்பந்தாட்ட மைதானத்தில் 17.07.2019 முதல் 21.07.2019 வரை நடைபெற்றது.
இப்போட்டி கடந்த 5 நாட்கள் நடந்தது. இப்போட்டியின் இறுதி நாளில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி  இயக்குனர்  கே.வி.ராமமூர்த்தி பங்கேற்று பரிசுகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில் விளையாட்டுகளை ஊக்குவிக்கவேண்டும் என்கின்ற எண்ணத்தில்  தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சுழற்கோப்பைக்காக  நிகழ்வு நடந்துள்ளது என்று கூறினார்.
இந்த நிறைவு விழாவில் தூத்துக்குடி கூடைபந்தாட்ட சங்க தலைவர்  வி.வி.டி. பிரேமானந்தம், செயலாளர் சுஜேஸ் ராஜா, பொருளாளர் நார்ட்டன்,பாலாஜி, விளையாட்டு வீரர்கள், காவல்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo