Onetamil News Logo

கட்சிகளுக்கு 25 கோடி ரூபாய் தேர்தல் நிதி விவகாரம் ;தேர்தலில் போட்டியிட திமுகவுக்கு தடை விதிக்க வேண்டும் ; சசிகலா புஷ்பா 

Onetamil News
 

கட்சிகளுக்கு 25 கோடி ரூபாய் தேர்தல் நிதி விவகாரம் ;தேர்தலில் போட்டியிட திமுகவுக்கு தடை விதிக்க வேண்டும் ; சசிகலா புஷ்பா 


சென்னை 2019 அக்டோபர் 6 ; திமுக தேர்தல் நிதியாக இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட், கொங்கு மக்கள் தேசிய கழகம் ஆகிய கட்சிகளுக்கு 25 கோடி ரூபாய் கொடுத்ததாக அந்தக் கட்சி தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்திருந்த வரவு செலவு கணக்கு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த விவகாரத்தில் அதிமுக, தேமுதிக போன்ற கட்சிகள் திமுகவிடம் விளக்கம் கேட்ட நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின், 'இதுபற்றி உரியவர்களிடம் விளக்கம் சொல்லிவிட்டோம். மற்றவர்களிடம் சொல்ல அவசியம் இல்லை என கூறியுள்ளார்.
இந்த நிலையில், இதுகுறித்து சசிகலா புஷ்பா தமிழக தேர்தல் ஆணையத்திடம் 5 பக்கங்கள் கொண்ட புகார் மனுவை அளித்திருக்கிறார். அதில் கடந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தைச் சேர்ந்த திமுக என்ற மாநிலக் கட்சி தனது கூட்டணிக் கட்சிகளுக்கு தேர்தல் நிதியாக 25 கோடி ரூபாய் அளித்துள்ளதாக தேர்தல் ஆணைய ஆவணங்களின் வாயிலாக செய்திகள் வந்திருக்கின்றன.எந்த அடிப்படையில் திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு 25 கோடி ரூபாய் கொடுத்தது? இந்த 25 கோடி ரூபாய்க்கான ஆதாரம், அதாவது வந்த வழி என்ன என்பது பற்றி தேர்தல் ஆணையத்திடம் திமுக சார்பில் கொடுத்திருக்கிறார்களா? திமுகவால் உதவி பெற்ற கட்சிகளும் இந்த நிதிபற்றி தங்களது தேர்தல் வரவு செலவு அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்களா? இந்த நிதி தேச விரோத சக்திகளிடம் இருந்து,அதாவது தீவிரவாத சக்திகளிடம் இருந்து கிடைத்ததா என்ற சந்தேகம் வருகிறது. தேசத்தின் பாதுகாக்கும் நிலைப்புத் தன்மைக்கும் இதனால் அச்சுறுத்தல் வரக் கூடும். எனவே இந்த விவகாரத்தை சிபிஐ போன்ற உயர் விசாரணை அமைப்புகள் விசாரிக்க வேண்டும்.
இதுபற்றி திமுகவிடம் விளக்கம் கேட்க வேண்டும். அவர்கள் அளிக்கும் விளக்கத்தில் தேர்தல் ஆணையத்துக்கு சந்தேகத்துமிடமின்றி திருப்தி இல்லையென்றால், திமுக தேர்தலில் போட்டியிடுவதை தடை செய்வது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும்என்று சசிகலா புஷ்பா தன் புகாரில் கூறியிருக்கிறார். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo