Onetamil News Logo

சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம்-தமிழ்நாடு சார்பில் தமிழகத்தில் 38 மாவட்டங்களில் நாளை காலை கண்டன ஆர்ப்பாட்டம் - மாபெரும் இணையவழி கண்டனக் கூட்டம் 

Onetamil News
 

சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம்-தமிழ்நாடு சார்பில் தமிழகத்தில் 38 மாவட்டங்களில் நாளை காலை கண்டன ஆர்ப்பாட்டம் - மாபெரும் இணையவழி கண்டனக் கூட்டம் 


சென்னை: 2020 ஆகஸ்ட் 2 ; சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம்-தமிழ்நாடு சார்பில் தமிழகத்தில் 38 மாவட்டங்களில் நாளை காலை கண்டன ஆர்ப்பாட்டம் - மாபெரும் இணையவழி கண்டனக் கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் ,தியாகு, செயலாளர்மீ.த.பாண்டியன், ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ;                                                                  தென்காசி விவசாயி அணைக்கரை முத்துவை சித்திரவதை செய்து படுகொலை செய்த வனக் காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யக் கோரியும்,வேலூர் மாவட்டம் ஷாலினி மற்றும் அவரது குழந்தையை சட்டவிரோதமாக கைது செய்து சித்திரவதை செய்த காட்பாடி காவல் ஆய்வாளர் புகழ் -ஐ கண்டித்தும்.சாத்தான்குளம் காவல் நிலைய இரட்டைப் படுகொலைக்கு துணை புரிந்த அரசு மருத்துவர் வினிலா, நீதிமன்ற நடுவர் சரவணன் மற்றும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்  மீது குற்ற வழக்குப் பதிவு செய்யக்கோரியும்...
அரசியல் கட்சித் தலைவர்கள், மக்கள் இயக்கத் தலைவர்கள், மனித உரிமை அமைப்புகள் இணைந்து உருவாக்கிய காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம்-தமிழ்நாடு சார்பில் தமிழகத்தில் 38 மாவட்டங்களில் காலை கண்டன ஆர்ப்பாட்டம் - மாபெரும் இணையவழி கண்டனக் கூட்டம்
காவல் சித்திரவதைகளும் காவல் படுகொலைகளும் நடக்கவிடாது முழுமையாகத் தடுத்திட வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு அமைப்புகள், மக்கள் இயக்கங்கள், மனித உரிமை அமைப்புகள் ஒருங்கிணைப்பில் காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் எதிர் வரும் 03.08.2020, திங்கள் கிழமை காலை ஒவ்வொரு மாவட்டத்திலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்களும், மாலை 5.00 மணியளவில் மாபெரும் இணையவழி கண்டனக் கூட்டமும் நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில் தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும், காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முன்னிலையில் 03.08.2020 திங்கள் கிழமை காலை 10.00 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமானது ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெற உள்ளது.
03.08.2020 மாலை 5.00 மணிக்கு இணைவழி வாயிலாக மாபெரும் கண்டனக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிகழ்வானது Facebook & Youtube பக்கங்களில் நேரலையிலும் ஒளிபரப்பாக உள்ளது.
மாலை 5.00 மணிக்கு நடைபெறும் மாபெரும் இணையவழி கண்டன் கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், மக்கள் இயக்கங்களின் தலைவர்களும் இணைந்து கண்ட உரை நிகழ்த்த உள்ளனர்.
சித்திரவதை இல்லாத - காவல் படுகொலைகள் நிகழாத தமிழகத்தை உருவாக்கும் நோக்கில் ஊடகங்களின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே இச்செய்தியினை பரவலாக மக்கள் மத்தியில் கொண்டு செல்லவும், இந்த தளத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளவும் 
மாலை 5.00 மணிக்கு நடைபெறும் மாபெரும் இணையவழி கண்டன் கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், மக்கள் இயக்கங்களின் தலைவர்களும் இணைந்து கண்ட உரை நிகழ்த்த உள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo