Onetamil News Logo

ஹைட்டோகார்பன் திட்டம் கிள்ளை பிச்சாவரம் மான்குரோவ் காடுகளுக்கு நடுவே வருகிறது என்று அச்சம் ;கிள்ளை ரவிந்திரன் அறிக்கை

Onetamil News
 

ஹைட்டோகார்பன் திட்டம் கிள்ளை பிச்சாவரம் மான்குரோவ் காடுகளுக்கு நடுவே வருகிறது என்று அச்சம் ;கிள்ளை ரவிந்திரன் அறிக்கை


 
தூத்துக்குடி  2019 மே 14 ;ஹைட்டோகார்பன் திட்டம் கிள்ளை பிச்சாவரம் மான்குரோவ் காடுகளுக்கு நடுவே வருகிறது என்று அச்சம் ;கிள்ளை ரவிந்திரன் அறிக்கை விடுத்துள்ளார்.                                                                    
முன்னாள் கிள்ளை பேரூராட்சி மன்ற தலைவர்.S.கிள்ளை ரவிந்திரன்.வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது....ஹைட்டோகார்பன் திட்டம் செயல் படுத்த எடப்பாடி அரசின் முழு ஒத்துழைப்போடு,மோடி அரசு நிறைவேற்ற  அனுமதி அளித்துள்ளது.டெல்டா மாவட்டங்களான நாகை,கடலூரிலும்,அதோடு விழுப்புரம், பாண்டி உள்ளிட்ட பகுதிகளில் 158 இடங்களில் கிண்று அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தாகி மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது..
இதில் பல கிணறுகள் விவசாய நிலத்தில் எப்போதும் போல் வருகிறது,அதில் ஒன்று சதுப்பு நில காடுகள் அடங்கிய கிள்ளை பிச்சாவரம் மான்குரோவ் காடுகளுக்கு நடுவே வருகிறது என்ற செய்திதான் எனக்கு இடியாய் இறங்கி உள்ளது.
2004ல் ஏற்பட்ட சுனாமியில் எங்கள் கிள்ளை பேரூராட்சியில் 176பேர் இறந்தார்கள்,ஆனால்,இந்த பிச்சாவரம் காடு உள்ள இடத்தில் ஒரு உயிரைகூட இந்த காடு பலி வாங்க அனுமதிக்க வில்லை என்பதுதான் சிறப்பு..
அந்த நேரத்தில் சுடுகாடாய் காட்சியளித்த இந்த சுற்றுலா வளாகத்திற்கு நான் பேரூராட்சி மன்ற தலைவராக இருந்த போது புராதன நகர மேம்பாட்டு நிதியில் 50லட்சத்தை வழகியவர் தலைவர் கலைஞர்..
நெருக்கடி நேரத்தில் இந்த பகுதியில்தான் ஒரே மேடையில் 9திருமணங்களை தலைவர் கலைஞர் நடத்திவைத்தார்,MGR நடித்த இதயக்கனியில் தொடங்கி,இன்று கூட திரிஷா ஷூட்டிங்தான் நடக்கிறது இந்த அடர்ந்த காட்டில்...
" நாரையும் அறியா நாலாயிரம் ஓடைகள்"என்பது பழமொழி இங்குள்ள எண்ணற்ற  கால்வாய்கள் நாரைகளுக்கு கூட தெரியாது என்பார்கள்.
பல ஆயிரம் வெளி நாட்டு பறவைகள் ஆண்டுதோரும் இங்கு வந்து செல்கிறது,ஜப்பான்,மொரிஷியஸ்,போன்ற நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் இந்த அரியவகை தாவரங்களில் இருந்து எய்ட்ஸ் உள்ளிட்ட பல கொடிய நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளனர்,சிதம்பரம் நடராஜர் ஆலயத்தின் கோபுர கட்டுமான பணியின் போது சோழமன்னருக்கு இருந்த வெண்குஷ்டம் எனும் நோய் இங்கு வந்ததால் சரியானது என்பது வரலாறு..
பல்வேறு வெளி நாட்டு சுற்றுலாபதணிகள் வந்து இயற்கை அழகை ரசிக்கின்றனர்,லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகளின் ரம்யத்தை அழிப்பதோடு கிள்ளை பகுதியின் 13000 பேரின் வாழ்வாதாரத்தை இந்த அரசு நாசமாக்குகிறது,இப்படி பெருமை மிகுந்த எங்கள் வனத்தை,எங்கள் வாழ்வாதாரத்தை அழிக்க நாங்கள் எப்படி சம்மதிக்க முடியும்?
ஆடாதடா..ஆடாதடா..மோடி ! என்று சொல்ல தோன்றுகிறது,ஆம்,சிதம்பரம் பகுதியில் ஆடுவது ஒருவர்தான் அவரை தவிர யார் ஆடினாலும் அரை வாழ்க்கையோடு அழிந்த வரலாறு உண்டு,அவர்தான் தில்லை அம்பலத்து ஆடல் வல்லான்,அவரது தலவிருட்சமாக உள்ள தில்லை மரம் இந்த மான்குரோவ்க்கு மத்தியில் மட்டுமே உள்ளது,
இந்த காடுகளை அழிப்பது என்பது சிதம்பரம் நடராஜர் ஆலயத்து தலவிருட்சத்தை அழிப்பதாகும்!
இந்த திட்டதை நிறைவேற்ற வேண்டுமென்றால் 13,000பேரை சுட்டு கொன்று விட்டுதான் நிறைவேற்ற முடியும் என்று எச்சரிக்கையாகவே பதிவு செய்கிறேன் !
இயற்கையின் மீதும் சுற்றுசூழலின் மீதும் ஆர்வமும்,அக்கரையும்,உள்ள தோழர்கள் மிக விரைவில் நாங்கள் முன்னெடுக்கும் பெருந்திரள் போராட்டத்திற்கு ஆதரவு தர வேண்டுகிறேன்! என்று கூறியுள்ளார்.
 

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo