Onetamil News Logo

உலக அளவிலான கபடி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சென்னையில் வரவேற்பு 

Onetamil News
 

மலேசியாவில் நடைபெற்ற உலக அளவிலான கபடி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சென்னையில் வரவேற்பு 



சென்னை 2019 ஜூலை 29 ; மலேசியாவில் நடைபெற்ற உலக அளவிலான கபடி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சென்னையில் வரவேற்பு அளிக்கப்பட்டது..
மலேசியாவில் கடந்த 20ஆம் தேதி முதல் 28ம் தேதி வரை நடந்த உலக அளவிலான கபடி போட்டியில் 38 நாடுகள் கலந்து கொண்டன..இந்த போட்டியில் இந்தியா சார்பில் நியூ கபடி ஃபெடரேஷன் சார்பில் ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணியினர் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர்.. 
இதைத் தொடர்ந்து இன்று அவர்கள் விமானம் மூலம் சென்னை திரும்பினர். விமான நிலையத்தில் அவர்களுக்கு கபடி வீரர்கள் மற்றும் உறவினர்கள் பூங்கொத்து கொடுத்து மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்..இதனை அடுத்து வீரர்களுக்கான பாராட்டு விழா சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.. இதில்  இந்தியா சார்பாக பங்கேற்ற நியூ ஃபெடரேசன் கபடி அணி  ஆடவர் மற்றும் மகளிர் அணி வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்..
நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ராமன், காவல்துறை டிஐஜி ரவி உள்ளிட்டோர் பங்கேற்று தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்..
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo