Onetamil News Logo

திரைப்படப் படப்பிடிப்பு நடத்துவதற்கும், திரையரங்குகளை திறப்பதற்கும் அனுமதி வழங்கவேண்டும் - தமிழ் திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகள் அமைச்சருடன் சந்திப்பு 

Onetamil News
 

திரைப்படப் படப்பிடிப்பு நடத்துவதற்கும், திரையரங்குகளை திறப்பதற்கும் அனுமதி வழங்கவேண்டும் - தமிழ் திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகள் அமைச்சருடன் சந்திப்பு 


சென்னை  2020 ஜூலை 28 ;தமிழ் திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகள்  செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர்  கடம்பூர் ராஜூ -வை இன்று சந்தித்து தங்களது கோரிக்கை மனுவினை அளித்தார்கள்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று  செய்தி மற்றும் விளம்பரத் துறைஅமைச்சர்  கடம்பூர் ராஜூ அவர்களை,தமிழ்நாடு திரைப்பட வர்த்தக சபையின் சார்பில் அதன் தலைவரும், திரைப்பட இயக்குநருமான பாரதிராஜா தலைமையில் நிர்வாகிகள் தங்களது கோரிக்கைகளடங்கிய மனுவினைஅளித்து, தங்களது கோரிக்கைகளை   தமிழ்நாடு முதலமைச்சர்  கனிவான கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றித் தருமாறு கேட்டுக் கொண்டார்கள்.
தமிழ்திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகள் தங்களது மனுவில், திரைப்படப் படப்பிடிப்பு நடத்துவதற்கும், திரையரங்குகளை திறப்பதற்கும் அனுமதி வழங்கவேண்டும் எனவும், கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறைந்து திரையரங்கங்கள் மீண்டும் திறக்கப்பட்டாலும் டிக்கெட் விலையை குறைக்கவேண்டியுள்ளதால் சினிமாத் துறைக்கு விதிக்கப்பட்டுள்ள 8 சதவிகித  ------- முழுவதுமாக நீக்கவேண்டும் எனவும், தனியாக உள்ள சிறிய திரையரங்குகளை மினி ப்ளெக்ஸ் (அ) மல்டி ப்ளெக்ஸாக மாற்றுவதற்கு பெறப்படும் அனுமதியினை எளிதாக்கவேண்டும் எனவும், திரையரங்குகளில் தற்பொழுது டிஜிட்டல் முறையில் திரைப்படங்கள் திரையிடப்படுவதால், ----------க்கு வேலை இல்லாத சூழ்நிலையில் திரையரங்குகளில் ---- பெறவேண்டும் என்றமுறையை முற்றிலும் நீக்கவேண்டும் எனவும், பொதுப்பணித் துறையிடமிருந்து ஒவ்வொரு வருடமும் ---------ஐ புதுப்பிக்க வேண்டும் என்ற முறையிலிருந்து மூன்று வருடத்திற்கு ஒரு முறை புதுப்பிக்க அனுமதி அளிக்கவேண்டும் எனவும் கோரியுள்ளார்கள்.
செய்தி மற்றும் விளம்பரத் துறைஅமைச்சர்  தமிழ்திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகளிடம் அவர்களது கோரிக்கைகளை சம்பந்தப்பட்டத்துறைஅமைச்சர்களோடு,  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கனிவான கவனத்திற்கு எடுத்துச் சென்று ஆவன செய்வதாக தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது, திரைப்படஇயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்,  தயாரிப்பாளர்கள் கே.ஆர்., டி.ஜி.தியாகராஜன், டி.சிவா, ஜி.தனஞ்செயன், கே.ராஜன், சுரேஷ் காமாட்சி மற்றும் லலித் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo