Onetamil News Logo

டெல்லி மாநாடு சென்ற 1103 பேர் தாமாக முன் வந்து தகவல் கொடுத்தனர், அவர்களில் 110 பேருக்கு கொரோனா உறுதி 

Onetamil News
 

டெல்லி மாநாடு சென்ற 1103 பேர் தாமாக முன் வந்து தகவல் கொடுத்தனர், அவர்களில் 110 பேருக்கு கொரோனா உறுதி 


சென்னை 2020 ஏப்ரல் 3 ;டெல்லி மாநாடு சென்ற 1103 பேர் தாமாக முன் வந்து தகவல் கொடுத்தனர், அவர்களில் 110 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் பேட்டி அளித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. மொத்தம் 110 பேருக்கு இன்று மட்டும் கொரோனா பாதித்துள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் 234 ஆக உயர்ந்துள்ளது.நேற்று தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா தாக்குதல் ஏற்பட்டது.
இவர்களில் 50 பேர் டெல்லி மாநாடு சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் பேட்டி அளித்துள்ளார்.பீலா ராஜேஷ் தனது பேட்டியில், தமிழ்நாடு அரசின் வேண்டுகோளை ஏற்று டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் தானாக முன்வந்து எங்களிடம் தகவல் தெரிவித்தமைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo