Onetamil News Logo

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கோமதி மாரிமுத்து முதல் தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்து பெருமை சேர்த்திருக்கிறார்

Onetamil News
 

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கோமதி மாரிமுத்து முதல் தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்து பெருமை சேர்த்திருக்கிறார்


சென்னை 2019 ஏப்.23 ;தங்கத் தமிழ் மங்கை கோமதி மாரிமுத்து  இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்து பெருமை சேர்த்திருக்கிறார் தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து..
கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில், ஆசிய சாம்பியன்ஷிப் தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் திருச்சி மாவட்டம் முடிகண்டம் கிராமத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து பங்கேற்று 800 மீட்டர் ஓட்டப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.
துடிப்புடன் ஓடி முதலிடம் பிடித்த கோமதி, இந்தியாவுக்காக முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்று தந்தார். உலக அரங்கில் இந்தியாவுக்குப்  பெருமை தேடித் தந்துள்ள தமிழகத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்துவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன..
30 வயதாகும் கோமதி, 2 நிமிடம் 02.70 நொடிகளில் 800 மீட்டர் தூரத்தைக் கடந்து முதலிடம் பிடித்தார்..
அவரது மிகச்சிறந்த ஓட்டம் இதுதான்.பந்தயத்தை ஓட ஆரம்பித்தபோது கோமதி மூன்றாவது இடத்தில்தான் இருந்தார். கடைசி 150 மீட்டரில் ஆக்ரோஷமாக ஓடி, சீன வீராங்கனையைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார்..
 ‘‘அந்த நொடிகள் மிகக் கடினமாக இருந்தன. பந்தயக் கோட்டை நான் முதலில் தொட்டேன் என்பதை உணரவே முடியவில்லை. ஏதோ கனவு போல இருந்தது’’ என்கிறார் கோமதி..
திருச்சியைச் சேர்ந்தவர் கோமதி. ஏழ்மையான விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்..
விளையாட்டின் மீது இருக்கும் ஆர்வத்தால் 20 வயது முதலே பயிற்சி எடுத்து வருகிறார்..
தற்போது பெங்களூருவில் வருமானவரித் துறையில் பணிபுரிந்தபடி பயிற்சி எடுத்துவரும் கோமதி, ஏற்கனவே இரண்டு முறை ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வெல்லாமல் ஏமாற்றம் அடைந்தார்..
இந்தியாவுக்கான பதக்கக் கணக்கில் முதல் தங்கத்தை கோமதி மாரிமுத்து பெற்றுக் கொடுத்துள்ளார். 2 நிமிடம் 2.7 வினாடியில் அவர் இலக்கை எட்டினார்.
இதனிடையே, தங்க மங்கை கோமதி மாரிமுத்துவுக்கு, முதலமைச்சர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஆசிய தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கோமதிக்கு, நமது தமிழ்நாட்டு மக்கள் சார்பாக, மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.இதுபோன்று, பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பங்கேற்று பல வெற்றிகளை குவித்து, இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்திடுமாறு முதலமைச்சர் வாழ்த்தியுள்ளார்.
பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பங்கேற்று பல வெற்றிகளை குவித்து, இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்திடுமாறு முதலமைச்சர் வாழ்த்தியுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், கோமதி மாரிமுத்து, இந்தியாவுக்கு முதல் தங்கத்தை பெற்றுத் தந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ளார் .இவர்கள் தவிர, அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் உள்ளிட்டோர், தங்கமங்கை கோமதிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo