Onetamil News Logo

தமிழகத்தில் தென்காசி, செங்கல்பட்டு ஆகியவை புதிய மாவட்டங்களாக அறிவிப்பு! 

Onetamil News
 

தமிழகத்தில் தென்காசி, செங்கல்பட்டு ஆகியவை புதிய மாவட்டங்களாக அறிவிப்பு! 


சென்னை  2019  ஜூலை 18 ;தென்காசி, செங்கல்பட்டு தமிழகத்தில் புதிய மாவட்டங்களாக சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.தமிழக மாவட்டங்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. 
தமிழகத்தில் தற்போது மொத்தம் 32 வருவாய் மாவட்டங்கள் இருக்கின்றன. கடைசியாக கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாகக்கப்படும் என்று கடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்கான ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமிக்கப்பட்டு புதிய மாவட்ட செயல்பாட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இன்று சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில் தென்காசி மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் புதியதாக உருவாக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. நெல்லையில் இருந்து பிரிந்து தென்காசி தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என்றும் காஞ்சிபுரத்தில் இருந்து பிரிந்து செங்கல்பட்டு தனி மாவட்டமாக உருவாக்கப்படும் எனவும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார். மேலும், புதிய மாவட்டங்களுக்கு 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். 
புதிய வரையறை - ;திருநெல்வேலி மாவட்டம் :சீதபற்பநல்லூர்,திசையன் விளை,தேவர் குளம், கயத்தார், நாங்குநேரி,வள்ளியூர், களக்காடு,அம்பை, 
புதிய வரையறை - ;தென்காசி மாவட்டம் :ஆலங்குளம், தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில்,வாசுதேவநல்லூர்,சிவகிரி
ஏற்கனவே கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என அறிவித்துள்ள நிலையில், தற்போது மேலும் 2 மாவட்டங்கள் உதயமாகியுள்ளன.இதை தொடர்ந்து தமிழக மாவட்டங்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்துவரும் நிலையில், இது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். 

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo