Onetamil News Logo

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹி இன்று பதவியேற்றார். 

Onetamil News
 

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹி இன்று பதவியேற்றார். 


 தூத்துக்குடி 2019 நவம்பர் 11 ;சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதியாக நியமிக்கப்பட்டுள்ள ஏ.பி.சஹி இன்று ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்றார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த விஜயா கம்லேஷ் தஹில் ரமாணியை மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்ததை ஏற்காமல் செப்டம்பர் 6ஆம் தேதி ராஜினாமா செய்தார். 
தற்போது மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றி வருகிறார்.
அதையடுத்து பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமரேஷ்வர் பிரதாப் சஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்தது. அதற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.
அதன்படி, சென்னை உயர் நீதிமன்றம் 1862ல் உருவாக்கப்பட்டதிலிருந்து 49வது தலைமை நீதிபதியாகவும், சுதந்திர இந்தியாவின் 30வது தலைமை நீபதியாகவும் ஏ.பி சஹி இன்று பதவி ஏற்றார். அவருக்கு 
ஆளுநர் மாளிகையில்  ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த விழாவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி , அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் 11:30 மணியளவில் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தலைமை நீதிபதி அமர்வில் வழக்குகளை விசாரிக்க தொடங்கினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo