Onetamil News Logo

எத்தலப்பருக்கு மணிமண்டபம் அமைக்க அரசு பரிசீலனை ;செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் சட்டசபையில் பேச்சு

Onetamil News
 

எத்தலப்பருக்கு மணிமண்டபம் அமைக்க அரசு பரிசீலனை ;செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் சட்டசபையில் பேச்சு      


சென்னை 2019 பிப்ரவரி 13 ; ஆங்கிலேயரை தூக்கிலிட்டு,ஆங்கிலேயருக்கு அச்சத்தை உண்டாக்கிய எத்தலப்பருக்கு மணிமண்டபம் அமைக்க அரசு பரிசீலனை - இன்று சட்டமன்றத்தில்  செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர்  சட்டமன்ற உறுப்பினர்  இரா.ஜெயராமகிருஷ்ணன் அளித்த பதிலுரை.
 பேரவைத் தலைவர் அவர்களே,
    தமிழகத்தின் பொற்கால முதல்வர் புரட்சித்தலைவி அம்மாவினுடைய அரசு தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த பெருமக்கள் மற்றும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக பாடுபட்டு தம் வாழ்வையே அர்ப்பணித்த தமிழ் சான்றோர்களின் நினைவைப் போற்றும் வகையில், இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று தியாகங்கள் பல புரிந்த தியாகிகளை பெருமைப்படுத்தும் வகையில்
69 நினைவகங்கள், 4 அரங்கங்கள், 5 நினைவுத் தூண்கள், 1 நினைவுச் சின்னம் ஆகியவை உருவாக்கப்பட்டு, செய்தி மக்கள் தொடர்புத் துறையால் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு  வருகிறது.
    தளி எத்தலப்பர்  திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தளி முதல் தழிஞ்சி மலைப்பகுதி வரை தலைமையிடமாகக் கொண்டு மக்களை ஆட்சி செய்த அரசர்.  தென் கொங்கு பாளையங்களின் தலைமை  பாளையக்காரர், பண்டைய விஜய நகர மன்னர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்.  மராட்டிய விடுதலை விரர் துண்டாஜிவாக், திப்புசுல்தானுடனும், கொங்குநாட்டு விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை மற்றும் மலபார் பகுதி விடுதலை வீரர் கேரளவர் மதுவுடனும் தொடர்பில் இருந்தவர்.  மலைவாழ் மக்களை அரவணைத்து வாழ்ந்தவர்.  மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்தவர்.
    இந்தியாவுக்கு வணிகம் செய்ய வந்த ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி மண்ணாசை கொண்டு ஆற்காடு நவாப்பையும், திப்புசுல்தானையும் தந்திரத்தால் வென்று, சமூகத்தை துண்டாடி பாளையங்களின் குடியாட்சியை குலைத்து ஊடுருவிய நேரத்தில், ம.ணின் மானத்தை காக்க கம்பெனி ஆட்சி அதிகாரத்துக்கு எதிராக வெகுண்டு எழுந்து போரிட்டு மடிந்த மாவீரர்களில் எத்தலப்பரும் ஒருவர்.  தாழ்த்தப்பட்ட மக்களை ஒருங்கிணைத்து ஆங்கிலேய கம்பெனியின் சுரண்டல்களை எதிர்த்து போர் புரிந்துள்ளார்.
    அமராவதி காடுகளில் பெண்களுக்கு படைப்பயிற்சி அளித்து ஆங்கிலேயரை எதிர்க்க தற்கொலை படையை உருவாக்கியவர்.  மேலும், வேலுநாச்சியாரின் பணிப்பெண் குயிலி என்பவர் இவரிடம் போர் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.  இதுதவிர, பாஞ்சாலக்குறிச்சி போரில் ஊமைத்துரை சிறைப்பட்டவுடன் சிறை மீட்பு செய்ததும் கட்டபொம்மனுக்கு பிறகு இரண்டாம் பாஞ்சாலக்குறிச்சி போரில் தளியிலிருந்து படைவீரர்களை அனுப்பி போரிட்டவர் தான் தளி எத்தலப்ப நாயக்கர் ஆவார்.
    எத்தலப்ப நாயக்கர் , ஆங்கிலேயர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில், தளி பாளையத்தை உளவு பார்த்த ஆங்கிலேயர் ஆண்ட்ரு கேதீசை, 1801 ஏப்ரல் 23-ஆம் நாள் தளி பாளையம் திணைக்குளம் பகுதியில் தூக்கிலிட்டார். இவ்வளவு சிறப்புமிக்க எத்தலப்ப நாயக்கர் அவர்களுக்கு சமீபத்தில் உடுமலைப்பேட்டையில் அவரது வரலாற்றை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில், புத்தக நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.  அந்த புத்தக நூல் வெளியீட்டு விழாவில்அந்த மாவட்டத்தைச் சார்ந்த  கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அவர்களும், அந்தப் பகுதியிலே உள்ள சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் எல்லாம் கலந்துகொண்டு அந்த விழாவை சிறப்பித்தோம். அப்பொழுது அந்தப் பகுதி மக்கள் அந்த வரலாற்று ஆராய்ச்சி நூலை தமிழகத்திலுள்ள அனைத்து மக்களும், வருங்கல இளைய சந்ததியினரும் அறிந்து கொள்ளும் வகையில் அந்த நூலை நூலகத்தில் வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கின்றார்கள். முதலமைச்சர் அவர்களுடைய அனுமதியுடன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்  மூலம்  விரைவில் அந்த நூல் அனைத்து நூலகங்களிலும் வைப்பதற்கான ஏற்பாட்டை அரசு மேற்கொள்ளும் என்பதை உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    தளி எத்தலப்ப நாயக்கர் அவர்களுடைய பெருமைகளை  உறுப்பினர் அவர்களும் எடுத்துரைத்தார், நானும் அவர்களுடைய வரலாற்றை இங்கே பதிவு செய்திருக்கிறேன்.  மாண்புமிகு அம்மாவின் அரசு தலைவர்களை பெருமைப்படுத்துவதிலே தன்னிகரற்ற அரசாக இருந்து கொண்டிருக்கின்றது. எனவே,  உறுப்பினர் அவர்களது கோரிக்கையை  முதலமைச்சர் அவர்களுடைய கவனத்திற்கு எடுத்துச் சென்று பரிசீலிக்கப்படும் என்பதை  உறுப்பினர் அவர்களுக்கு பேரவைத் தலைவர் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேசினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo