Onetamil News Logo

நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு தமிழகத்தில் இருந்து 6 பேர் போட்டியின்றித் தேர்வு ;வைகோ -வுக்கு வாழ்த்து குவிகிறது. 

Onetamil News
 

நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு தமிழகத்தில் இருந்து 6 பேர் போட்டியின்றித் தேர்வு ;வைகோ -வுக்கு வாழ்த்து குவிகிறது. 


சென்னை  2019 ஜூலை 11 ;நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு தமிழகத்தில் இருந்து 6 பேர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டது தொடர்பாக, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் செயலாளர் கி.சீனிவாசன் விடுத்த அரசு அறிவிப்பு !
இன்று மாலை, சட்டமன்றப் பேரவைச் செயலாளர் அலுவலகத்தில்,  தி.மு.கழகத் தலைவர் ஸ்டாலின் ,முன்னிலையில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ, பி வில்சன் மற்றும் வைகோ ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான  சான்றிதழ்களை பேரவைச் செயலாளர் கி.சீனிவாசனிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.
பேரவைச் செயலாளர் அலுவலக வளாகத்தில்....! தலைமைச் செயலகம் - எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில், கழகப் பொதுச்செயலாளர் வைகோ , தி.மு.கழகத் தலைவர் அவர்களுக்குப் பொன்னாடை போர்த்த.... தி.மு.கழகத் தலைவர் ஸ்டாலின் அவர்கள் கழகப் பொதுச்செயலாளர்  வைகோ அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தி அன்பை, மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்...!
முன்னாள் தி.மு.கழகத் தலைவர் பேரறிஞர் அண்ணா ,பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்  ,முன்னாள் தி.மு.கழகத் தலைவர் கலைஞர் போன்றோர் நினைவிடங்களில் மலர் மாலை வைத்து அவர்களின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினர். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் உள்ளிட்ட முன்னணியினர் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். கோபாலபுரம் - கலைஞர் இல்லத்தில், தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி வணங்கினார். முரசொலி செல்வம்,  செல்வி, செல்வம், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் உடன் இருந்தார்கள்.
திமு கழகப் பொதுச் செயலாளர்  பேராசிரியர் அன்பழகன்-யை , அவரது இல்லம் சென்று சந்தித்து வாழ்த்தினார். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo