Onetamil News Logo

சென்னை அழைத்துவரப்பட்ட விஜய்!' - நெய்வேலி ஷூட்டிங் ஸ்பாட்டில் என்ன நடந்தது?

Onetamil News
 

சென்னை அழைத்துவரப்பட்ட விஜய்!' - நெய்வேலி ஷூட்டிங் ஸ்பாட்டில் என்ன நடந்தது?



சென்னை 2020 பிப்ரவரி 5 ;ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே விஜய்க்கு சம்மன் அளித்து, சிறிதுநேரம் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், கூடுதலாக விசாரிக்க வேண்டி இருப்பதாகக் கூறி, தங்களுடன் வருமாறு அழைத்துள்ளனர். அதற்கு விஜய், `ஈவ்னிங் ஷூட்டிங் முடிந்ததும் நேராக வருகிறேனே?' என்று பதிலளித்திருக்கிறார். ஆனால், தங்களுடன் உடனே வருமாறு வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்
 இதுதொடர்பாக வருமான வரித்துறை வட்டாரங்களில் விசாரித்தோம். ``இது நேரடியாக விஜய்யைக் குறிவைத்து நடந்த சோதனை கிடையாது. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தொடர்புடையது. அந்த வகையில், சில ஆவணங்கள் குறித்து அவரிடம் விசாரிக்க வேண்டிய தேவை இருக்கிறது. அதனாலேயே, அவர் சென்னைக்கு அழைத்துவரப்படுகிறார். அதேபோல், `எங்கள் காரில்தான் வர வேண்டும்' என்று அதிகாரிகள் தரப்பில் கறார் காட்டியதாகச் சொல்லப்படுகிறது. அப்படி எந்த இடத்திலும் அதிகாரிகள் குறிப்பிட மாட்டார்கள். அவர்களுக்கு அதற்கான அதிகாரமும் இல்லை. சின்ன அளவிலான ரெய்டு என்றால், சம்பந்தப்பட்ட நபரை அவர்களது வாகனத்திலேயே வரச் சொல்லிவிட்டு வந்துவிடுவார்கள். பெரிய அளவிலான ரெய்டு என்பதாலேயே விஜய்யைத் தங்கள் காரில் வரும்படி அவர்கள் அழைத்திருக்க வாய்ப்பிருக்கிறது.
 சென்னையில் உள்ள விஜய்யின் வீடு அல்லது வருமான வரித்துறை அலுவலகம் என இரண்டில் ஒரு இடத்துக்கு அவர் அழைத்துச்செல்லப்படலாம். பின்னர், தங்களிடமுள்ள ஆவணங்கள் குறித்து அதிகாரிகள் விளக்கம் கேட்பார்கள். விஜய்யின் வீடு, அலுவலகம் உள்ளிட்டவை சென்னையில் இருக்கின்றன. அவர் சென்னையில் இருந்திருந்தால், இது பெரிதாக்கப்பட்டிருக்காது. நெய்வேலியில் இருந்து அவர் அழைத்து வரப்பட்டதால் விவகாரம் பெரிய அளவு கவனம் பெற்றிருக்கிறது. இது வழக்கமான நடைமுறைதான்'' என்கின்றனர்.
`மாஸ்டர்' படப்பிடிப்புத் தளத்திலிருந்து விஜய் அழைத்துச் செல்லப்பட்டதால், படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. இதற்கிடையே, சென்னையில் சாலிகிராமம் மற்றும் நீலாங்கரை பகுதிகளில் உள்ள நடிகர் விஜய்யின் வீடுகளில் அதிகாரிகள் சோதனை நடத்தியிருக்கிறார்கள். இந்த நிலையில், சென்னைக்கு அழைத்து வரப்பட்ட விஜய்யிடம் பனையூரில் உள்ள இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்
 இதையடுத்து, தன்னுடைய காரில் வருவதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகளை முன்னால் செல்லும்படியும் விஜய் கேட்டுக்கொண்டிருக்கிறார். ஆனால், அதை ஏற்க மறுத்த அதிகாரிகள், தங்கள் காரிலேயே வரும்படி அழைத்திருக்கிறார்கள். இதனால், அவர்கள் வந்த இன்னோவா காரிலேயே விஜய் சென்னைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்'' என்றனர்
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo