Onetamil News Logo

நடிகரும்,மருத்துவருமான சேதுராமன் 36 வயதில் மாரடைப்பால் காலமானார். 

Onetamil News
 

நடிகரும்,மருத்துவருமான சேதுராமன் 36 வயதில் மாரடைப்பால் காலமானார். 


சென்னை 2020 மார்ச் 26 ;நடிகரும்,மருத்துவருமான சேதுராமன் மாரடைப்பால் காலமானார். அவரது திடீர் மறைவால் திரையுலக பிரபலங்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.
 சேதுராமன் நடிகராக மட்டுமன்றி, தோல் மருத்துவ நிபுணராகவும் அறியப்பட்டவர். இவரிடம் பல்வேறு திரையுலக பிரபலங்கள் தோல் சிகிச்சை எடுத்து வந்தார்கள். எம்.பி.பி.எஸ், எம்.டி படித்த இவர் மும்பை மற்றும் சிங்கப்பூரில் லேசர் முறையில் தோல் சிகிச்சை அளிக்கும் பயிற்சியும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தின் மூலம் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் சேதுராமன். அந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பால் தொடர்ச்சியாக 'வாலிப ராஜா', 'சக்க போடு போடு ராஜா' மற்றும் '50/50' உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவர் நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பராவார்.கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் சந்தானத்துடன் நடித்திருந்தவர் நடிகர் சேதுராமன். இவர் மருத்துவர் தொழில் செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு வயது 36.,கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்திற்கு பிறகு சேது ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தார். வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா போன்ற படங்களில் நடித்தார். அதன் பிறகு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் தனது டாக்டர் பணியில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார்.நேற்று இரவு சென்னையில் வீட்டில் இருக்கும் போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அருகிலிருந்த மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். அங்குச் சிகிச்சை பலனின்றி இரவு 8:30 மணியளவில் அவருடைய உயிர் பிரிந்தது. என்கிற அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. அது சினிமா துறையினர் மற்றும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.சேதுவுக்கு 2016ல் உமையாள் என்ற பெண்னுடன் திருமணம் நடைபெற்றது. அவ்ர்களுக்கு தற்போது ஒரு பெண் குழந்தை ஒரு வயதில் இருக்கிறது.
 திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் இவருடைய இழப்பை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை என்று தங்களுடைய ட்விட்டர் பதிவில் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo