Onetamil News Logo

NEET  பயிற்சி வகுப்புகள்  நடத்தும் மையங்களுக்கு தேவையான அவகாசத்தைக் கொடுத்து, அவர்கள் மாணவர்களைச்  சுரண்டி, கொள்ளையடிக்கும் செயலுக்கு அரசே உதவிடுகிறதா? 

Onetamil News
 

NEET  பயிற்சி வகுப்புகள்  நடத்தும் மையங்களுக்கு தேவையான அவகாசத்தைக் கொடுத்து, அவர்கள் மாணவர்களைச்  சுரண்டி, கொள்ளையடிக்கும் செயலுக்கு அரசே உதவிடுகிறதா? 


சென்னை 2019 ஜூலை 19 ; 10,11,12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை இன்று வெளியிட்டுள்ளது. மிக விரைவாக இதனை வெளியிட்டு, கல்வியில் புதுமை புகுத்துவதாக மக்களிடம் மாயையை உருவாக்கிடும் பள்ளிகல்வித் துறைக்கு சில கேள்விகள் :                      
1 ) புதிய பாடத்திட்டத்தை இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தும் போது, அதிகப்படியான சுமையை மாணவர்களிடம் ஏற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சில பாடங்களுக்கு முழுவதுமாக புத்தகம் வெளியிடப்படாததால், ஏற்கனவே பயம் கொண்டுள்ள மாணவர்களுக்கு, கால அட்டவணை அறிவிப்பு மனச்சிதைவை ஏற்படுத்தாதா?                 
2) புதிய பாடத்திட்டத்தில் அமைந்த பாடங்களை நடத்த சுமார் 200 வேலைநாட்கள் தேவைப்படும் பட்சத்தில் அந்த வேலை நாட்களுக்கான காலண்டரை அரசு வெளியிடாமல், தேர்வு அட்டவணை வெளியிடுவதில் அவசரப்படுவது ஏன்?     
3) பள்ளி இறுதி வகுப்புகளுக்கு விரைவாக தேர்வுகள் துவங்குவதால், பிற வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கான வேலை நாட்கள் மிகவும். குறைந்து, அவர்களின் கல்வி பாதிக்கப் படுகிறதே. இதற்கு அரசு பொறுப்பேற்குமா? ( பிப்ரவரி இறுதி வாரம் முதல் பல உயர் நிலை /மேல்நிலைப் பள்ளிகள்  மாலை நேரம் மட்டுமே இயங்குகின்றன. ஆனால் இந்நாட்கள் முழு வேலை நாட்களாக  கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இதன் விளைவாக மாணவர்களுக்கான பாடங்களை அவசர கோலத்தில்  முடிக்க வேண்டிய கட்டாயம்)     
4) மாணவர்களின் ஓராண்டு கற்றல் திறனை சோதிப்பதற்கான ஒரு வழியே தேர்வுகள் - ஆனால் , விரைவான தேர்வு அட்டவணை வெளியீடு, ஏதோ தேர்வுகள் நடத்துவதற்காகவே அரசு கல்வித் துறை இயங்குவது போலவும், வினாத்தாள்கள் திருத்துவதற்காகவே ஆசிரியர்கள் நியமிக்கப் படுவது போலவுமான  எண்ணத்தை உருவாக்குகிறது. இந்நிலையை மாற்றி  தரமான கல்வியை தமிழக மாணவர்கள் பெற்றிட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் முயற்சி மேற்கொள்வார்களா?                
5) சென்ற ஆண்டிலும் விரைவாக தேர்வுகள் நடத்தப்பட்டு, மிக விரைவாக முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் மற்ற மாநிலங்களிலும், CBSE தேர்வு முடிவுகளும்  அறிவிக்கப்படாததால் ஒற்றைச் சாளர முறை மாணவர் சேர்க்கை அரசு கல்லூரிகளில் மிக தாமதமாகவே நடைபெற்று வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த ஆண்டும் அவசர கோலத்தில் தேர்வுகள் நடத்தப்படுவதற்கான காரணம் தான் என்ன? அரசியல்வாதிகள் நடத்தும் பொறியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளில் விரைவாக மாணவர் சேர்க்கையை முடித்து,    அவர்கள் பணம் சம்பாதிக்கும் முயற்சியை துரிதப்படுத்தவா?         
6) புதிய மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டங்களை மாணவர்களுக்கு புரிய வைக்க ஆசிரியர்களுக்கும், புரிந்து கொள்ள மாணவர்களுக்கும் தேவையான குறைந்தபட்ச நாட்கள் பள்ளிகள் நடத்துவதற்குரிய முயற்சிகளை எடுக்காமல்,  விரைவாக தேர்வுகள் நடத்துவதில் அரசு  முனைப்புடன் செயல் படுவதேன்? பாடங்களை   அவசர, அவசரமாக நடத்திவிட்டு, மிக விரைவாக தேர்வுகளை முடித்து விட்டால், NEET  பயிற்சி வகுப்புகள்  நடத்தும் மையங்களுக்கு தேவையான அவகாசத்தைக் கொடுத்து, அவர்கள் மாணவர்களைச்  சுரண்டி, கொள்ளையடிக்கும் செயலுக்கு அரசே உதவிடுகிறதா?
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo