Onetamil News Logo

இன்று ஆகஸ்ட் 12 - உலக யானைகள் தினம் 

Onetamil News
 

இன்று ஆகஸ்ட் 12 - உலக யானைகள் தினம் 


சென்னை 2020 ஆகஸ்ட் 12 ; தரை வாழ் விலங்குகளில் யானைதான் மிகப்பெரியது. தும்பிக்கை வடிவில் மூக்கை பெற்றுள்ள ஒரே விலங்கும் யானைதான். யானைகள் சமூக வாழ்க்கை முறை கொண்ட விலங்கு ஆகும். யானைக் கூட்டத்துக்கு தலைவர் கிடையாது. தலைவி மட்டும்தான் உண்டு. பெண் யானைதான் தலை வியாக இருந்து, யானைகள் கூட்டத்தை வழிநடத்திச் செல்லும். யானைகள் அதிகளவு தண்ணீர், உணவை உட்கொள்ளும். ஆகவே, தண்ணீர், உணவு அதிகமுள்ள காடுகளில் மட்டுமே யானைகள் வசிக்கும். யானைகளுக்கு காடு நல்ல வாழ்விடமாக அமைந்தால், அந்தக் காடு ஆரோக்கியமானதாக காணப்படும். அதனால், யானைகள் சுற்றுச்சூழலின் ஆரோக்கியத்தைக் காட்டும் அடையாளமாகக் கருதப்படுகிறது. யானைகளின் வாழ்விடங்களில் ஏற்படும் நாகரிக வளர்ச்சிப் பணிகள், காடுகளில் வெட்டப்படும் மரங்கள், அதிகரிக்கும் குவாரிகள், வழிப்பாதைகள் ஆக்கிரமிப்பு. தந்தத்துக்காக யானைகள் வேட்டையாடப்படுதல். காட்டில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுதல், விறகு பொறுக்குதல் ஆகியவை யானைகள் அழிவுக்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன. யானைகளை பாதுகாக்கும் விழிப்புணர்வை மக்கள் மத்தியில் உருவாக்கும் விதமாக இன்று, உலக யானைகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஆப்பிரிக்க, ஆசிய காடுகளில் நிலவும் பாதுகாப்பற்ற சூழலால் யானைகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. யானைகளை பாதுகாக்கும் வகையில் வனங்களில் இயற்கை வளம் குன்றாமல் பாதுகாப்பது அவசியம் என பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு நிறுவனம் (ஐயுசிஎன்) எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் வனப்பகுதிகளில் பல்வேறுவிதமான அச்சுறுத்தல்களால் மாதத்துக்கு 8 யானைகள் உயிரிழக்கின்றன. இதுகுறித்து நாகர்கோவிலைச் சேர்ந்த வன ஆர்வலர் டேவிட்சன் சற்குணம் கூறியதாவது:
காடுகளில் பார்த்தீனியம், உன்னிச்செடி உள்ளிட்ட பலனற்ற தாவரங்கள் அதிகரித்துள்ளதால், யானைகளுக்கு தேவையான புற்கள், பசுமை உணவுகள் கிடைப்பது அரிதாகிவிட்டது. பருவமழை பொய்த்தல், காலநிலை மாற்றம், வறட்சி போன்றவற்றால் உணவு மற்றும் தண்ணீர் தேடி மலையோர குடியிருப்புகளை நோக்கி யானைகள் கூட்டமாக வருகின்றன.
வன விதிகளை அத்துமீறும் கும்பலால் காடுகளில் ஏற்படும் தீவிபத்து, குவாரிகளில் கல் தோண்டுவது, யானை வசிப்பிடங் களில் மனித நடமாட்டம் அதிகரிப்பது போன்றவற்றாலும் யானைகள் காடுகளைவிட்டு வெளியேற வேண் டிய கட்டாயத்தில் உள்ளன. மலை யோர கிராமங்களுக்கு புகும் யானை கள் பழக்கமில்லாத ஆழமான பள்ளங்களில் விழுவது, ரயில் தண்ட வாளங்களை கடப்பது, மின்வேலி யில் சிக்குவது போன்றவற்றால் அதிக அளவில் உயிரிழப்பு ஏற்படுகின்றன.
வனத்துறை கணக்கெடுப்பின் படி தமிழகத்தில் 2017-ல் 2,761 யானைகள் மட்டுமே இருந்தன. ஆசியாவில் உள்ள மொத்த யானைகளின் எண்ணிக்கையில் இந்தியாவில் 44 சதவீதம் அதாவது 27,312 யானைகள் உள்ளன. கேரளாவில் 5,706, கர்நாடகாவில் 6,049 யானைகள் உள்ளன. தமிழகத்தில் நீலகிரி, கோவை, ஆனைமலை, ஆனைமுடி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் யானைகளின் வசிப்பிடங்களாக உள்ளன.
யானைகளுக்கு தினமும் 150 கிலோ முதல் 200 கிலோ உணவு தேவை. இலைகள், மரப்பட்டைகள், புற்கள், மரக்குச்சிகளை அவை உண்கின்றன. 12 மணி நேரத்தில் இருந்து 18 மணிநேரம் உண் பதிலேயே நேரத்தை செலவிடு கின்றன. குடிப்பதற்கும், உடல் வெப்பத்தை தணிக்கவும் தினமும் 220 லிட்டர் தண்ணீர் தேவைப் படுகிறது. வறட்சி காலத்தில் இவை கிடைக்காதபோது, குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைகின்றன.
எனவே, அனைத்து காலங்களிலும் வனங்களில் யானைக்கு தேவையான உணவு கிடைக்கும் வகையில் பழ மரங்களை உருவாக்க வேண்டும். வனத்துக்குள் ஆழ் குழாய்களும் அருகிலேயே தண்ணீர் தொட்டிகளும் ஏற்படுத்தி, வன விலங்குகளுக்கான தண்ணீர் தேவையைப் போக்க வேண்டும். வனங்களில், மனித இடையூறை கட்டுப்படுத்த வேண்டும். இதன் மூலம் யானைகளை அழிவிலிருந்து தடுக்கலாம் என்றார்
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo