Onetamil News Logo

பக்ரீத் தமிழில் ‘தியாகத் திருநாள் ;ஹஜ் புனிதப் பயணத்தின் இறுதியில் ஆரோக்கியமான ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை இறைவனுக்கு பலியிட வேண்டும்

Onetamil News
 

பக்ரீத் தமிழில் ‘தியாகத் திருநாள் ;ஹஜ் புனிதப் பயணத்தின் இறுதியில் ஆரோக்கியமான ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை இறைவனுக்கு பலியிட வேண்டும்


சென்னை 2019 ஆகஸ்ட் 12 ; இஸ்லாமியர்களின் அடிப்படை கடமைகளில் ஒன்று ஹஜ் புனிதப் பயணம். இதன் இறுதியில் ஆரோக்கியமான ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை இறைவனுக்கு பலியிட வேண்டும். இவ்வாறு செய்து கொண்டாடுவதை ’பக்ரீத்’ என்கின்றனர். இதனை தமிழில் ‘தியாகத் திருநாள்’ என்றும், அரபியில் ‘ஈத் அல்-அதா’ என்றும் அழைக்கின்றனர்.
இறை தூதர்களில் ஒருவர் என்று நம்பப்படுபவர் இப்ராஹிம். இவர் ஈராக் நாட்டில் சுமார் 4,000 ஆண்டுக்கு முன் வசித்ததாக கூறப்படுகிறது. இவருக்கு நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லை. இந்நிலையில் 2 வது மனைவி ஆசராவுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ‘இஸ்மாயில்’ என்று பெயர் சூட்டினர்.  இஸ்மாயிலுக்கு 13 வயது ஆன போது, ஒரு நாள் இப்ராஹிமின் கனவில் கடவுள் வந்துள்ளார். அப்போது, இஸ்மாயிலை தனக்கு பலி கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார். இது குறித்து தனது மகனிடம் கூறி விளக்கி விட்டு, அவனை இப்ராஹிம் பலியிடத் தொடங்கினார். இவரின் அளவற்ற இறை நம்பிக்கையை எண்ணி, கடவுள் ஆச்சரியமடைந்தார்.
இந்நிலையில் ‘சிஃப்ரயீல்’ என்ற தூதரை அனுப்பி, இப்ராஹிமின் செயலை கடவுள் தடுத்துள்ளார். மேலும் ஒரு ஆட்டை அளித்து, அதனை இஸ்மாயிலுக்கு பதிலாக பலியிடுமாறு கட்டளையிட்டுள்ளார்.
இதையடுத்து இப்ராஹிமின் தியாக உணர்வை நினைவு கூறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் கால்நடைகளை பலியிட்டு ’பக்ரித்’ கொண்டாடப்படுகிறது.  இந்த இறைச்சியை மூன்றாகப் பிரித்து, நண்பர்கள், ஏழைகளுக்கு அளித்துவிட்டு, மற்றொரு பங்கை இஸ்லாமியர்கள் தாங்களே எடுத்துக் கொள்கின்றனர். முக்கியமாக பலியிடப்படும் விலங்குகள் ஊனமாக இருக்கக் கூடாது. மேலும் ஒரு வயதுக்கு மேற்பட்டதாக இருக்க வேண்டும்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo