Onetamil News Logo

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி"" திருநாள் வாழ்த்துச் செய்தி

Onetamil News
 

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி"" திருநாள் வாழ்த்துச் செய்தி


சென்னை,2019 ஆகஸ்ட் 22 : தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி"" திருநாள் வாழ்த்துச் செய்தியை தெரிவித்துள்ளார்.
ஞான நூலான பகவத் கீதையின் மூலம் வாழ்வின் நெறிமுறைகளை உலகிற்கு எடுத்துரைத்த பகவான் கிருஷ்ணர் அவதரித்த தினமான ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி திருநாளை  கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது இனிய ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி திருநாள் நல்வாழ்த்துகளை  மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
நல்லோரைக் காக்கவும், தீயன செய்வோரை அழிக்கவும், அறத்தை நிலைநிறுத்தவும் நான் யுகந்தோறும் பிறக்கிறேன்"" என்றுரைத்த பகவான் கிருஷ்ணர் அவதரித்த ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி திருநாளன்று, மக்கள் தங்கள் இல்லங்களின் முற்றங்களில் வண்ணக் கோலங்களிட்டு, பழங்கள், இனிப்புகள், பலகாரங்களை இறைவனுக்கு படைத்து, சின்னக் குழந்தைகளின் பிஞ்சு காலடிகளை மாவில் நனைத்து, இல்லங்களின் வழி நெடுக பதித்து, ஸ்ரீ கிருஷ்ண பகவானே தங்களது இல்லங்களுக்கு வந்தருளியதாக பாவித்து போற்றி வணங்குவர்.
பகவான் கிருஷ்ணர் அவதரித்த இத்திருநாளில், உலகில் அன்பும், அமைதியும், மகிழ்ச்சியும் பெருகி, மக்கள் அனைவரும் எல்லா நலன்களோடும், வளங்களோடும் வாழ்ந்திட வேண்டும் என்று வாழ்த்தி, அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது  மனமார்ந்த ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். என்று அவர் கூறியுள்ளார்.  
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo