Onetamil News Logo

தமிழக அரசு ஊழியர்கள் பணிநேரத்தில் செல்போனில் வாட்ஸ் அப், பேஸ்புக் உட்பட சமூக வலைதளங்களில் மூழ்கி விடும் அவலம் ;பொதுமக்கள் கொந்தளிப்பு

Onetamil News
 

தமிழக அரசு ஊழியர்கள் பணிநேரத்தில் செல்போனில் வாட்ஸ் அப், பேஸ்புக் உட்பட சமூக வலைதளங்களில் மூழ்கி விடும் அவலம் ;பொதுமக்கள் கொந்தளிப்பு


 
தூத்துக்குடி ஜனவரி 11 ;  அரசு அலுவலகங்களில் அரசு ஊழியர்கள் வாட்ஸ் அப் பயன்படுத்தியே காலத்தை போக்கும் காலமாகிவிட்டது.                                                                   
தமிழகத்தில்  பெரும்பான்மையான அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் பணிநேரத்தில் மணிக்கணக்கில் செல்போன்களை பயன்படுத்துவதால் பணிகள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது. பல ஊழியர்கள் பணிநேரத்தில் தங்களது செல்போனில் வாட்ஸ் அப், பேஸ்புக் உட்பட சமூக இணையதளங்களில் மூழ்கி விடுகின்றனர்.   இதனால் பல்வேறு முக்கிய தேவைகளுக்காக அரசு அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுவதாக அரசுக்கு ஏராளமான புகார்கள் வந்தன.                                                                         
இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் அரசு அலுவலகங்களில் பணிநேரத்தில் ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த கேரள அரசு தடை விதித்தது. ஆனால் இந்த உத்தரவால் எந்த பலனும் ஏற்படவில்லை. பெரும்பாலான அரசு ஊழியர்கள் பணிநேரத்தில் வழக்கம்போல செல்போன்களை பயன்படுத்தி வந்தனர். இதனால் இந்த உத்தரவை கடுமையாக அமல்படுத்த கேரள அரசு தீர்மானித்துள்ளது.

கேரளாவில் தடை விதித்தது போல், தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் பணிநேரத்தில் ஊழியர்கள் செல்போன் பயன்படுத்துவதற்கு தமிழக அரசு தடை விதிக்குமா? என்று பொதுமக்கள் பலரும் கேள்வி கேட்கும் நிலைமை உருவாகி உள்ளது. பொதுமக்களுக்கு சேவை செய்யும் அரசு ஊழியர்கள் வாட்ஸ் அப், பேஸ்புக் பார்த்தே நேரத்தை போக்கி இரவு 7 மணி வரை வேலை பார்க்கும் அவலம் தொடருவதாக சமூக ஆர்வலர் மணிராஜ் நம்மிடையே கூறினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo