Onetamil News Logo

தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் இரா.சுதாகர்,முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து

Onetamil News
 

தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் இரா.சுதாகர்,முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து


 

தூத்துக்குடி 2019 ஆகஸ்ட் 23 ;தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக பொறுப்பேற்ற சுதாகர், துணைத்தலைவர் கணேச பாண்டியன் ஆகியோர் தமிழக முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
 தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கூட்ட அரங்கில், தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர், துணைத்தலைவர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ  தலைமையில்  (19.08.2019) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி.சண்முகநாதன்  (திருவைகுண்டம்), சின்னப்பன்  (விளாத்திகுளம்) ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், துணைத்தலைவர் கணேஷ்பாண்டியன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் 19 பேர் என மொத்தம் 21 பேர் பதவி ஏற்றுக்கொண்டனர். 
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக பொறுப்பேற்ற சுதாகர், துணைத்தலைவர் கணேச பாண்டியன் ஆகியோர் தமிழக முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.இதில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ , சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன் ,கழக அமைப்பு செயலாளரும்,முன்னாள் மாவட்ட கழக செயலாளர் ஆறுமுகநயினார் ,ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo