Onetamil News Logo

இந்திய அளவில்  சிறந்த கலைக்கல்லூரிகள்  தேர்வு ;முதல் பத்து இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 3 கல்லூரிகள் இடம்பிடித்துள்ளன.

Onetamil News
 

இந்திய அளவில்  சிறந்த கலைக்கல்லூரிகள்  தேர்வு ;முதல் பத்து இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 3 கல்லூரிகள் இடம்பிடித்துள்ளன.


சென்னை வெள்ளிக்கிழமை 2020 ஜூலை 03; இந்திய அரசின் மத்திய மனித வளத் துறை மேம்பாட்டு அமைச்சகம் பட்டியலிட்டிருக்கும் சிறந்த 100 கல்லூரிகளின் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த 37 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. முதல் பத்து இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 3 கல்லூரிகள் இடம்பிடித்துள்ளன.
சென்னையைச் சேர்ந்த லயோலா கல்லூரி இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கும் நிலையில், திருச்சியில் உள்ள பிஷப் ஹீபர் கல்லூரி நான்காவது இடத்தையும் சென்னையில் உள்ள பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி பத்தாவது இடத்தையும் பிடித்துள்ளது.
சென்னையில் உள்ள கல்லூரிகளில் எத்திராஜ் கல்லூரி (16வது இடம்), எஸ்ஐஇடி பெண்கள் கல்லூரி (47வது இடம்), சங்கர்லால் சுந்தர்பாய் ஷாசன் ஜெயின் கல்லூரி (59வது இடம்), மீனாட்சி மகளிர் கல்லூரி (59வது இடம்) ஆகிய பிற கல்லூரிகளும் இந்த 100 கல்லூரிகளில் இடம்பெற்றுள்ளன.அகில இந்திய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தரவரிசை பட்டியலில் பாளையங்கோட்டை தூய சேவியர் கல்லூரி முதலிடம் பிடித்துள்ளது. தேசிய அளவில் சிறந்த கலை, அறிவியல் கல்லூரியாக பாளையங்கோட்டை புனித சேவியர் கல்லூரி தேர்வு செய்யப்பட்டுள்ளது. தரவரிசையில் புனித சேவியர் கலை, அறிவியல் கல்லூரி முதலிடம் பெற்றுள்ளதாக பல்கலைக்கழக  தேசிய தர மதிப்பீட்டுக் குழு அறிவித்துள்ளது.இந்தியாவில் நாடு முழுவதும் உள்ள அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இந்த ஆண்டிற்கான தலை சிறந்த கல்லூரிகளின் பட்டியலினை மத்திய அரசின் வணிகவள மேம்பாட்டு துறை வெளியிட்டது. இந்த பட்டியலில் டெல்லியில் மிராண்டா ஹவுஸ் பல்கலைக்கழகம் முதல் இடத்திலும் இரண்டாவது இடத்தில லேடி ஸ்ரீராம் கல்லூரியும் மூன்றாவது இடத்தில இந்து கல்லூரியும் இடம் பிடித்துள்ளன.
இவ்வாறு வழங்கப்படும் தரவரிசை ஆனது அந்தந்த கல்லூரியின் உள்கட்டமைப்பு, ஆசிரியர்களின் தகுதி திறன், மாணவர்களின் தேர்ச்சி விகிதம், ஆசிரியர் மாணவர்கள் ஆகியோரின் ஆராய்ச்சி திறன், மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவி தொகை ஆகியவற்றின் அடிப்படையாக வைத்து மத்திய அரசின் வணிக வள மேம்பாட்டு துறையால் கணக்கிடப்படுகிறது.இந்திய அளவில் சிறந்த கல்லூரிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.அதில் முதல் 100 இடங்கள் பிடித்துள்ள  கல்லூரிகளின் தர வரிசை பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் இடம்பிடித்திருக்கும் முதல் 100 கல்லூரிகளில் 37 கல்லூரிகள் தமிழகத்தை சேர்ந்தவை. தமிழகம் கல்வியில் சிறந்துவிளங்குகிறது என்பது இது சான்றாகும்.
சென்னை லயோலா (2)
திருச்சி பிஷப் ஹீபர் (4),
சென்னை பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி (10)
கோவை பி.எஸ்.ஜி கல்லூரி (11)
மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரி (12)
விருதுநகர் ஐயநாடார் ஜானகியம்மாள் (13)
கோவை PSGR (14)
சென்னை எத்திராஜ் பெண்கள் கல்லூரி (16)
கோவை கொங்குநாடு கலை & அறிவியல் (19)
கோவை கிருஷ்ணா கலை & அறிவியல் (22)
திருச்சி ஹோலி கிராஸ் (26)
மதுரை ஃபாத்திமா கல்லூரி (27)
விருதுநகர் VVV கல்லூரி (38)
விருதுநகர் இந்துநாடார் கல்லூரி (39)
AVC கல்லூரி (43)
கோவை NGP (44)
சென்னை ஜஸ்டிஸ் பஷீர் அஹமத் சையத் (47)
திருச்செங்கோடு KS ரங்கசாமி (50)
கன்னியாகுமரி ஹோலி கிராஸ் (54)
விருதுநகர் சாய்வா பானு (56)
கோபி கலை அறிவியல் கல்லூரி (57)
சென்னை சங்கர்லால் ஜெயின் கல்லூரி (59)
சென்னை மீனாட்சி கல்லூரி (59)
காஞ்சிபுரம் வைஷ்ணவா கல்லூரி (62)
ஈரோடு கொங்கு கலை அறிவியல் (63)
கோவை நிர்மலா கல்லூரி (65)
கோவை ரத்தினம் கல்லூரி (66)
நாமக்கல் மகேந்திரா கலை அறிவியல் (67)
கோவை ராமகிருஷ்ணா கல்லூரி (68)
கோவை SNR Sons (69)
கோவை ஹிந்துஸ்தான் (75)
நாமக்கல் KSR (76)
சென்னை SRM (82)
நாமக்கல் முத்தாயம்மாள் (86)
திருப்பத்தூர் தூய திருஇருதய கல்லூரி (95)
திருச்சி நேஷ்னல் கல்லூரி (97)
பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் (100)                                                                    தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி பொருளாதாரம் மற்றும் மிகக்குறைந்த கட்டண கட்டமைப்பில் சிறந்த கல்லூரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo