Onetamil News Logo

கொரோனாவை கட்டுப்படுத்த சித்தர்கள் குறிப்பிடும் நன்மருந்துகளை சாப்பிடவும் ;நிலவேம்பு குடிநீர் அளித்தால், 'டெங்கு' மற்றும் 'சிக்குன் குனியா' கட்டுப்படும்...' என்றேன் ;மூலிகைமணி' டாக்டர் க.வேங்கடேசன் ,

Onetamil News
 

கொரோனாவை கட்டுப்படுத்த சித்தர்கள் குறிப்பிடும் நன்மருந்துகளை சாப்பிடவும் ;நிலவேம்பு குடிநீர் அளித்தால், 'டெங்கு' மற்றும் 'சிக்குன் குனியா' கட்டுப்படும்...' என்றேன் ;மூலிகைமணி' டாக்டர் க.வேங்கடேசன் ,90030 31796


சென்னை 2020 ஜூலை 13 ;வைரஸ் சற்று சிக்கலானது தான். அது, உருவாக்கி வரும் காய்ச்சல் மற்றும் மரண அபாயங்களை தடுக்கும் வழிகளை ஆராயலாம். இந்தக் காய்ச்சலை பொதுவாக சித்தர்கள், 'ஊழிப்பெருங்காய்ச்சல்' என, குறிப்பிடுகின்றனர்.பருவ கால மாற்றங்கள், இயற்கையில் ஏற்படும் மாற்றங்கள், உணவு குற்றங்கள், சுகாதார சீர்கேடுகளால் மட்டுமின்றி, அசைவ உணவுகளின் எதிர் விளைவாலும், இத்தகைய வைரஸ் பாதிப்புகள், மனிதனை தாக்கும்.இந்த வைரஸ் உருவான நாடு சீனா. இந்த நாட்டு மக்கள், கடல் வாழ் உயிரினங் கள் முதல், பாம்பு வரையும், முதலை, குரங்கு போன்ற ஜீவராசிகளையும் உண்ணும் பழக்கம் உள்ளவர்கள்.
இந்த ஜீவராசிகளின் வாயிலாக, கொரோனா உருவாக வாய்ப்பு மிகுதி. எனவே, இந்த பாதிப்பு வராமலிருக்க முதல் தற்காப்பு, அசைவ உணவை அறவே கைவிட வேண்டும்.அதற்கடுத்து, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி கொள்ளுதல் அவசியம். எந்த வைரசும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவர்களை பற்றுவதில்லை.உணவை, நம் பாரம்பரிய வழிமுறைப்படி தினம் இரண்டு வேளையாவது, புதிதாக சமைத்து, இளம் சூட்டுடன் உண்பதே சிறந்த வழி. அதை விடுத்து, சமைத்த உணவை குளிர்சாதனப் பெட்டியில் வாரக் கணக்கில் பாதுகாத்து, மீண்டும் சூடு செய்து சாப்பிடுவது, சுகாதார கேடாகும்.
அதேபோல, துரித உணவுகள், குளிர்பானங்கள், பதப்படுத்திய ரசாயன கலப்புள்ள உணவுகளை தவிர்ப்பது, மிக மிக நல்லது.அன்றாட உணவில் ரத்தத்தை வளப்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் துாதுவளை, கற்பூரவல்லி, முசுமுசுக்கை, புதினா, கருவேப்பிலை போன்றவற்றில், ஏதாவது ஒன்றை துவையலாக்கி உண்பது நல்லது.பகலில் முருங்கை கீரை சூப், ஆவாரம் பூ கூட்டு, காரட், பீட்ரூட் வெங்காயம் சேர்த்த மோர் பச்சடி மிகவும் நல்லது.காலை, மாலையில் துளசி, 20 இலை, கிராம்பு, இரண்டு மிளகு, 10 துாள் செய்து, ஒரு குவளை கொதி நீரில் போட்டு காய்ச்சி, வடிகட்டி, தேன், இரண்டு ஸ்பூன் கலந்து பருகுவது நுரையீரல், இதயம், மூளை ஆகியவற்றின் பாதுகாப்புக்கு கவசமாக விளங்கும்.
இரவில் படுக்கும் முன், பசும்பால் அரை டம்ளர், பூண்டு மூன்று பற்கள், மிளகு, 10 துாள் செய்து, மஞ்சள் பொடி மூன்று சிட்டிகை கலந்து, குங்குமப்பூ, 5 - 10 இதழ்கள் சேர்த்து பருகுவது, மிகச் சிறந்த ஆரோக்கிய கவசமாகும்.பப்பாளி, அன்னாசி, கொய்யா, ஆப்பிள், சப்போட்டா, மாதுளை போன்ற பழங்களை, அவ்வப்போது சாப்பிடுவது, தற்காப்பு நடவடிக்கையாகும்.
மாலை வேளைகளில், வீட்டில் மாவிலை, நொச்சி இலை, வேப்பிலை, யூகலிப்டஸ் இலைகளை உலர்த்தி, பொடி செய்து, சாம்பிராணியுடன் சேர்த்து புகைக்க, 10 நிமிடம் வீட்டினுள் இந்தப் புகையை மூலை முடுக்குகளில் பரவ விட்டால், எந்த வித வைரசும் அழியும்.இவை எல்லாம் தற்காப்பு முறைகள். இனி, மருத்துவ ரீதியாக, கொரோனா வைரஸ் நம்மை பாதிக்காத வகையில், சில மருந்துகளை சித்தர்கள், விஷக்காய்ச்சலை தடுக்கும் மூலிகை முறைகளாக, அந்த காலத்திலேயே கண்டறிந்து குறிப்பிட்டுள்ளனர்.
உத்தாமணி + மிளகு சூரணம்
'வேலிப்பருத்தி என்ற உத்தாமணி' மூலிகை, மிக சிறந்த ஆன்டி வைரஸ் மற்றும் ஆன்டிபயாடிக் குணமுள்ளது. கிராமங்கள், நகரங்கள், தோட்டங்களில் சாதாரணமாக தரையில் பரவக்கூடிய, இந்தக் கொடியை வேருடன் பிடுங்கி, அப்படியே இடித்து, அரை லிட்டர் அளவுக்கு சாறு எடுத்து, அதில், 200 கிராம் மிளகு சேர்த்து வைத்து, மூன்று நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். பின், பொடி செய்து, சலித்து ஒரு பாட்டிலில் பத்திரப்படுத்தவும். வைரஸ் எதுவான போதிலும், இந்த உத்தாமணி மிளகுப் பொடியில் கால் ஸ்பூன் எடுத்து தேன் கலந்து காலை, இரவு என, இரு வேளை சாப்பிட்டு வரவும். 5 - 10 நாட்கள் வரை சாப்பிட்டாலே போதும். எந்த வைரஸ் பாதிப்பும் உடலை பாதிக்காது.
மலைவேம்பு சூரணம்
மலைவேம்பு - 20 இலை
சீந்தில்கொடி - 1/4 பிடி
ஆடாதொடை - 10 இலைசுக்கு - 10 கிராம்
திப்பிலி - 10 கிராம்
இவை ஐந்தையும் இடித்து, 200 மில்லி கொதி நீரில் போட்டுக் காய்ச்சி, 100 மில்லியாக வடிகட்டி தேன் கலந்து பருகலாம். இதுவும் மிகச் சிறந்த வைரஸ் தடுப்பு முறையாகும். 5 - 10 நாட்கள் சாப்பிட்டால் போதும்.
வில்வ சூரணம் ;
நெல்லி வற்றல், சுக்கு, நெருஞ்சில், கோரைக்கிழங்கு, வில்வம், கொத்தமல்லி ஆகியவற்றை, தலா 20 கிராம் எடுத்து, இடித்து பொடிக்க வேண்டும். இதை, 200 மில்லி கொதிநீரில் போட்டுக் காய்ச்சி, வடிகட்டி, 100 மில்லி அளவு எடுத்து, தேன் இரண்டு ஸ்பூன் கலந்து பருகி வர, வைரஸ் தொற்று முற்றிலும் ஒழியும். 5 - 10 நாட்கள் செய்தாலே போதும்.
பவளமல்லி கஷாயம் ;
பவளமல்லியின் இலைகள் கால் பிடி எடுத்து, இஞ்சியுடன் கலந்து கஷாயம் செய்து, காலை, மாலை 100 மில்லி பருகி வரலாம். மேற்கண்ட மூலிகைகள், நாட்டு மருந்து கடைகளில் சாதாரணமாக கிடைக்க கூடியவையே. பரம்பரை சித்த மருத்துவ அனுபவம் உள்ளவர்களிடம் கூறினால் செய்து தருவர். பயமின்றி இதைச் செய்யலாம்; அணு அளவும் பக்கவிளைவுகள் ஏற்படாது.
இனி ஒருவேளை, கொரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டால், கடந்த, 75 ஆண்டுகளாக அடையாறில் இயங்கி வரும், இந்திய மருத்துவ உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் தயாரிக்கும், 'சுதர்சன சூரணம்' 100 கிராம் வாங்கி, தினமும் இரண்டு வேளையும், அரை ஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்து உண்ணவும்.இந்த கூட்டுறவு சங்கத்தின் தயாரிப்பாக, 'லிங்க செந்துாரம் நெ - 2' வாங்கி தினம் ஒரு வேளை, 50 மி., +200 மி.கி., தாளிசாதி சூரணத்துடன் தேனில் குழைத்து உண்ணலாம். அதேபோல், 'மகா ஏலாதி' குளிகை வாங்கி, தினம் மாலையில் ஒரு மாத்திரை தேனில் குழைத்து உண்ணலாம்.
இந்த வைரஸ் தாக்கம் வந்து உடல் சக்தியை இழக்க வைக்கும் போது, அதை ஈடு செய்ய, 'சயவனப்பிரசா' லேகியத்தை இரண்டு வேளை நெல்லி அளவு சாப்பிடுவது நல்லது.எனவே, கொரோனா வைரஸ் என்பது, ஏதோ புதியதாக வந்த வைரஸ் அல்ல.
நச்சு சூழல் காரணமாக வருவதால், வாழும் சூழல், உண்ணும் உணவு, நல்ல பழக்கங்களை மேற்கொள்வதன் மூலம், நம் நாட்டு சித்தர்கள் குறிப்பிடும் நன்மருந்துகளை, நிபுணத்துவம் வாய்ந்த சித்த மருத்துவர் மேற்பார்வையில், 5 - 10 நாட்கள் சிகிச்சை பெற்றாலே, இந்த வைரஸ் காய்ச்சலிலிருந்து நிச்சயம் மீளலாம். நம்பிக்கையும், முயற்சி மட்டுமே இதற்கு தேவை.
வட அமெரிக்காவில் விளையும், Echinacea angustifolia என்ற, மூலிகை உலக அளவில் மிகச்சிறந்த ஆன்டி வைரஸ் மூலிகையாகும். இதை ஓமியோபதி முறையில் Mothe Tincture ஆக தயாரித்துவிற்கின்றனர். இதை வாங்கி தினம் காலை, மாலை, இரவு என, மூன்று வேளை, 30 சொட்டு வீதம், கால் டம்ளர் தண்ணீரில் கலந்து குடித்து வர, 5 - 10 நாட்களில் கொரோனா வைரஸ் செயல்பாடு கட்டுப்படும்.
சிறப்பு ஆய்வுக்குறிப்பு
மேற்கண்ட மூலிகைகள் மட்டுமின்றி, கீழ்கண்ட மூன்று முக்கிய மூலிகைகளும் கொரோனா வைரஸ் போன்ற சிக்கலான காய்ச்சலை உருவாக்கும் வைரஸ்களை அழிக்கவல்லதாக சித்த மருத்துவ நுாற்குறிப்புகள் குறிக்கின்றன. அவை...
செஞ்சந்தனம்: இதன் பட்டையை கஷாயம் செய்து, 50 - 100 மில்லி அருந்தலாம். இஞ்சி கஷாயமும், தேனும் உடன் கலப்பது நல்லது.மருக்கொழுந்து: இதையும் மேற்கண்டவாறு ஆடாதொடை, திப்பிலியுடன் சேர்த்து கஷாயம் செய்து, 100 மில்லி காலை, மாலை இரு வேளை பருகலாம்.
ரோம விருட்சம்: கொல்லிமலை, பொதிகை மலை போன்ற மலைகளில் காணக்கிடைக்கும் இந்த மூலிகையை, கல்லீரல் புற்றுநோய்க்காக ஆராய்ந்து, வெற்றி பெற்ற டாக்டர் கே.வி.பாலாஜி, இதன் பட்டையை கிராம்பு, சுக்கு, அதிமதுரம் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட, கொரோனா வைரஸ் கட்டுப்படும் என்கிறார்.
அரசுக்கு வேண்டுகோள்...
கடந்த, 2006 - 2007ம் ஆண்டுகளில் அன்றைய தலைமை செயலர், திரிபாதி மற்றும் சுகாதாரத்துறை செயலர் சுப்புராஜ் ஆகியோரிடம், 'நிலவேம்பு குடிநீர் அளித்தால், 'டெங்கு' மற்றும் 'சிக்குன் குனியா' கட்டுப்படும்...' என்றேன். அவர்களும் அதை மேற்கொண்டு, தமிழகத்திலுள்ள சித்த மருத்துவமனைகள் மற்றும் 'பிரைமரி ஹெல்த் சென்டர்'களில் அவற்றை அளித்து, 'டெங்கு' காய்ச்சலை கட்டுப்படுத்தினர்.
அந்த நில வேம்பு குடிநீர் 'கொரோனா' வைரசுக்கு பயன்படாது. எனவே, மேற்கண்ட மருந்துகள், உணவு முறை மூலம் அரசு மக்களுக்கு அறிவுறுத்தலாம். மேலும், இந்திய மருத்துவத்துறை இயக்குனர் மூலம், சித்த மருத்துவ வல்லுனர் குழு அமைத்து மேற்கண்ட மருந்துகளை பற்றி ஆய்வறிக்கை தயாரித்து, அதை தமிழகமெங்கும் உள்ள சித்த மருத்துவமனைகள் மூலம் வினியோகித்தால், இந்த பாதிப்பிலிருந்து மக்களை மீட்கலாம். இது, என் வேண்டுகோள். என்றார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo